Header Logo

வணிகம்
447 Luna Tower: வடிவமைப்பு, ஒருமைப்பாடு, கொழும்பின் நிலையான இருப்பிடத்தின் மீதான நம்பிக்கைக்கு ஒரு சான்று

Apr 20, 2026 - 03:36 PM -

0

447 Luna Tower: வடிவமைப்பு, ஒருமைப்பாடு, கொழும்பின் நிலையான இருப்பிடத்தின் மீதான நம்பிக்கைக்கு ஒரு சான்று

ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் தெற்காசிய பிரிவான Belluna Lanka, கொழும்பு 02 இல் அமைந்துள்ள, ஏற்கனவே நிறைவு செய்யப்பட்ட, 447 Luna Tower எனும் தனது குடியிருப்புத் தொகுதியின் விற்பனைக்கான மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான குடியிருப்புகளை விற்பனைக்கு வெளியிடுவதன் மூலம் தமது குடியிருப்பு துறைச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துகிறது. இலங்கையில் தனது நீண்டகால இருப்பை உறுதிப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களின் நிலைபேறான நம்பிக்கையை இந்நிறுவனம் சுட்டிக்காட்டுவதுடன், கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளைத் தேடும் நுணுக்கமான கொள்வனவாளர்களிடையே நகர்ப்புற வாழ்க்கைக்கு உகந்த மற்றும் நீண்டகால மதிப்பைக் கொண்ட ஒரு தரம் மிக்க அடையாளமாக 447 Luna Tower விளங்குவதை மீள உறுதிப்படுத்துகிறது. 

44 தளங்களில் 202 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டுள்ள 447 Luna Tower ஆனது, நகரின் வேகமாக வளர்ந்து வரும் வானளாவிய கட்டடங்களுக்கு மத்தியில் ஒரு அமைதியான மற்றும் சமநிலையான வாழ்க்கைச் சூழலை வழங்குகிறது. ஒவ்வொரு குடியிருப்பும் விகிதாசார ரீதியிலும், ஒளி, காற்றோட்டம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புற குடியிருப்பு வடிவமைப்பிற்கான ஒரு நேர்த்தியான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இக்கட்டடத்தின் அளவு மற்றும் நிதானமான வடிவமைப்பு ஆகியன, அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. இது கொழும்பு நகருக்கே உரித்தான துடிப்புடன் இணைந்திருக்கும் அதேவேளையில் தனியுரிமையையும் அமைதியையும் வழங்குகிறது. இந்த சிந்தனைமிக்க அணுகுமுறையானது, கொழும்பின் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு துறையில் இத்திட்டத்தை தனித்து விளங்கச் செய்கிறது. 

இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் கட்டடக்கலை நிறுவனங்களில் ஒன்றான பிலிப் வீரரத்ன தலைமையிலான PWA Architects குழுவினரால் வடிவமைக்கப்பட்ட 447 Luna Tower ஆனது, PWA மற்றும் Belluna Lanka ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருமித்த வடிவமைப்புக் கருப்பொருளை பிரதிபலிக்கிறது. Belluna Lanka நிறுவனத்தின் வடிவமைப்புகளை உருவாக்குவதில் PWA முக்கிய பங்காற்றியுள்ளது. ‘Le Grand Galle’ மற்றும் 447 Luna Tower ஆகியவற்றின் வடிவமைப்பிற்கு தலைமை தாங்கி செயற்பட்டுள்ள இந்நிறுவனம், கொழும்பில் உள்ள Granbell Hotel திட்டத்தில் ஜப்பானிய வடிவமைப்பு குழுக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இந்த வலுவான பங்காளித்துவம், ஊவா மாகாணத்தில் அமையவுள்ள Granbell Hotel Ella திட்டத்திலும் தொடர்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்திலும், Belluna மற்றும் PWA ஆகியன வெறுமனே அழகியலுக்கு அப்பால், துல்லியம், ஒருமைப்பாடு மற்றும் இலங்கையின் வளர்ந்து வரும் சொத்து சந்தையின் சூழலுக்கு ஏற்ற பொருத்தப்பாடு ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய கவனத்துடன் உருவாக்குதல் (Building with Care) எனும் தத்துவத்தை பகிர்ந்து கொள்கின்றன. 

447 Luna Tower திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் தொடர்ச்சி மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் திறந்தவெளி உட்புறங்கள், இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் ஆகியவற்றில் பயன்பாடு, சௌகரியம், நீடித்துழைக்கும் தன்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இக்குடியிருப்பு திட்டமானது, பாரிய அறிவித்தல்களை வெளியிடுவதன் மூலம் அல்லாமல், நிலையான தரம் மற்றும் கட்டுமான உறுதிப்பாட்டின் மூலம் தன்னை ஒரு நேர்த்தியாக அமைக்கப்பட்ட குடியிருப்புத் தெரிவாக முன்னிலைப்படுத்துகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளைத் தேடும் கொள்வனவாளர்களால் இத்தகைய பண்புகளே தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. குடியிருப்பு, விருந்தோம்பல் மற்றும் வர்த்தகத் துறைகளில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட முன்னணி நிறுவனமான, Sanken Construction (Pvt) Ltd ஆனது, 447 Luna Tower கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் 2025 ஆம் ஆண்டின் இலங்கை தேசிய கட்டுமான விருது விழாவில் (Sri Lanka National Construction Awards 2025) கௌரவிக்கப்பட்டுள்ளது. அதன் நீண்டகால தரம் மற்றும் நம்பகத்தன்மை மீதான நம்பிக்கையை இது மேலும் வலுப்படுத்துகிறது. உள்ளூர் கட்டடக்கலை தலைமைத்துவத்திற்கு மேலதிகமாக, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பல்துறை வடிவமைப்பு மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘Ong Ong’ இத்திட்டத்திற்கு விசேட ஆலோசனைக்கான ஆதரவை வழங்கியது. கட்டுமான மற்றும் தொழில்நுட்ப ரீதியான மேம்படுத்தலை மேற்கொள்ளும் வகையில், இலண்டனை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச பொறியியல் நிறுவனமான Arup Group, இலங்கையின் NCD Consultants நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது. 

447 Luna Tower இல் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட குடியிருப்பு தொகுதிகளின் விற்பனைக்கான வெளியீட்டின் மூலம், கொள்வனவாளர்கள் கொழும்பு 02 இன் மிகவும் பிரபலமான பகுதிகளில் ஒன்றில் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்த, குடியேறத் தயாராக உள்ள ஒரு இல்லத்தை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். விருந்தோம்பல், குடியிருப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த சொத்து முகாமைத்துவம் ஆகியவற்றில் Belluna Lanka கொண்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில், 447 Luna Tower இல் பேணப்படும் தரநிலைகள், மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியன குறித்த நிறுவனத்தின் நீண்டகால அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றன. 

இது குறித்து. Belluna Co. Japan நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிரோஷி யசுனோ (Hiroshi Yasuno) தெரிவிக்கையில், “இன்றைய கொள்வனவானர்கள் வெறுமனே பிரமாண்டத்தையோ அல்லது கௌரவத்தையோ மட்டும் எதிர்பார்ப்பதில்லை. மாறாக ஒரு இடம் எவ்வாறு உணரப்படுகிறது, அதன் செயற்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கே அவர்கள் மதிப்பளிக்கின்றனர். ‘447 Luna Tower’ திட்டத்தில், அந்த உறுதிப்பாடு எமது செயல்முறை ஒழுங்கு, பொறியியல் துல்லியம் மற்றும் நாம் கட்டியெழுப்பும் ஒவ்வொரு திட்டத்தின் அடிப்படையிலும் உள்ள நம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது. வடிவமைப்பு ஒருமைப்பாடு மற்றும் செயற்பாட்டு வலிமை ஆகியவற்றின் இந்த ஒருங்கிணைப்பே எமது அனைத்து திட்டங்களிலும் Belluna தரநிலையை அமைக்கிறது.” என்றார். 

Belluna Lanka நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரெய்ஹான் மொரிஸ் (Reyhan Morris) தெரிவிக்கையில், “முழுமையாக நிறைவடைந்த மற்றும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் திட்டங்களுக்கு சந்தையில் தொடர்ச்சியான கேள்வி நிலவுவதை 447 Luna Tower பிரதிபலிக்கிறது. இருப்பிடம், வடிவமைப்பின் தரம், ஒப்படைப்பிற்குப் பின்னரான பராமரிப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் சொத்துகளுக்கே வாடிக்கையாளர்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பதை எமது தரவுகள் காட்டுகின்றன. Belluna Lanka நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மாதிரி இத்தகைய துறைகளில் வீட்டு உரிமையாளர்களுக்கு நீண்டகால மதிப்பை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.” என்றார். 

டோக்கியோ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய முதலீடுகளை கொண்ட ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தின் பின்புலத்துடன், Belluna Lanka தெற்காசிய பிராந்தியத்தில் நீண்டகால மதிப்பினை உருவாக்குவதன் மூலம் தனது தடயங்களை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது. இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளில் பரந்து விரிந்துள்ள முதலீடுகளுடன், தொழில்நுட்ப மேன்மை மற்றும் நீடித்த செயற்பாட்டுத் திறன் கொண்ட திட்டங்களை உருவாக்குவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இது நிறுவனத்தின் பரவலைடைந்து வரும் ஒவ்வொரு திட்டத்திலும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

Comments
0

MOST READ

காணொளி
பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

title