Header Logo

செய்திகள்
யாழ் - கண்டி வீதியில் பயங்கர விபத்து: இளைஞர் படுகாயம்

Apr 20, 2026 - 07:27 PM -

0

யாழ் - கண்டி வீதியில் பயங்கர விபத்து: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் மருதங்கடவல, வனமல் உயன பகுதியில் அநுராதபுரத்திலிருந்து மருதங்கடவல நோக்கி பயணித்த ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மருதங்கடவலையிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

அநுராதபுரம், சாலியபுர பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிபுரியும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இதனையடுத்து, பிரதேசவாசிகள் இணைந்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்ததையடுத்து, காயமடைந்த இளைஞர் மருதங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காயமடைந்த இளைஞரின் நெஞ்சுப்பகுதி மின்சாரத் தூணில் மோதியதில், விலா எலும்புகள் மற்றும் முதுகுப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பாக மருதங்கடவல பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

title