Header Logo

செய்திகள்
2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்

Apr 20, 2026 - 08:17 PM -

0

2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் மதுவரி வருமானம் 70.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், அந்த காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 61.95 பில்லியன் ரூபா இலக்கையும் இது தாண்டியுள்ளது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, எதிர்பார்க்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 113.6% வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வருமானம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 114.8% வளர்ச்சியாகும் எனவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புதிய அரசாங்கத்தின் முறையான வழிகாட்டல் மற்றும் அனைத்து தர மதுவரி அதிகாரிகளின் முழுமையான அர்ப்பணிப்பு காரணமாகவே இவ்வாறான சாதனை வருமானத்தை ஈட்ட முடிந்ததாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன தெரிவித்துள்ளார். 

மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் வடிசாலைகளை தொடர்ந்து கண்காணித்தல், மதுபான போத்தல்களில் பாதுகாப்பு முத்திரைகளை இடுதல், சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு எதிரான சுற்றிவளைப்புகளை அதிகரித்தல் மற்றும் அனுமதிப்பத்திர இடங்களை முறையாக ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த வருமான வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். 

அரச வருவாயை ஈட்டும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள இத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டிற்காக 245 பில்லியன் ரூபா வருமான இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

title