Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Apr 21, 2026 - 12:10 PM

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் இன்று (21) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளும், நீதி கோரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில், நகரின் காந்தி பூங்காவிலுள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி முதல்வர் தி.டினேஸ், மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டது. 

மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் சத்தியசீலன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். 

இந்நிலையில், மட்டக்களப்பு அரசடி, கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து மற்றுமொரு நினைவேந்தலை முன்னெடுத்தனர். கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மைகளைக் கண்டறியக் கோரியும், நீதி கோரியும் கவனயிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயம் மற்றும் நினைவேந்தல் நடைபெற்ற இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278