Header Logo

கிழக்கு
இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது

Apr 21, 2026 - 12:44 PM -

0

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை வேறு விதத்தில் திசை திருப்பியிருந்தார்கள். குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. ஆனால் இப்போது விசாரணைகளில் சில நம்பிக்கைகள் பிறந்திருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். 

இந்த ஆட்சி காலத்தில் ஒரு வெளிச்சம் தெரிவது போன்று தெரிகின்றது. அதாவது இரண்டாம் மட்ட குற்றவாளிகள், மூன்றாம் மட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது ஒரு தேவைக்காக, ஒரு ஆட்சி மாற்றத்திற்காக நடாத்தப்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலாக இது கொள்ளப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) காலை மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள சேமக்காலையில் நடைபெற்றது. 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை மனோருபனினால் விசேட பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டதுடன் புனித நீரும் தெளிக்கப்பட்டது. 

இந்த நினைவு தின நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது கருத்து தெரிவித்தி பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், 

அரசியல் ரீதியாக திட்டமிட்ட அடிப்படையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019 ஆம் ஆண்டு நான்காம் மாதம் 21 ஆம் திகதி நிகழ்த்தப்பட்டிருந்தது. அந்த நிகழ்வு நடைபெற்று இப்போது 7 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இன்னமும் முழுமையான குற்றவாளிகள் யார் என்பது அடையாளப்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் கூட நடைபெற்றிருந்தன. இந்த ஆட்சி காலத்தில் ஒரு வெளிச்சம் தெரிவது போன்று தெரிகின்றது. அதாவது இரண்டாம் மட்ட குற்றவாளிகள், மூன்றாம் மட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதாவது ஒரு தேவைக்காக, ஒரு ஆட்சி மாற்றத்திற்காக நடாத்தப்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலாக இது கொள்ளப்படுகின்றது. 

அண்மையில் கிடைத்த தகவல்களின் படி, இந்த விடயம் ஒரு திட்டமிட்ட அடிப்படையில் செய்யப்பட்டது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கான ஒரு சம்பவம் என்றும் கூறப்படுகின்றது. அதற்கு முன்பாக இந்த சம்பவத்தை வேறு விதத்தில் திசை திருப்பியிருந்தார்கள். 

குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. 

இப்போது ஓரளவுக்கு சில நம்பிக்கைகள் பிறந்திருக்கின்றது. அதாவது இதில் பிரதான திட்டமிட்டு செயற்பட்ட ஒரு உளவுதாரி அல்லது உளவு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது. அதன் மூலமாக பல்வேறுபட்ட சம்பவங்கள் வெளியில் கொணரப்பட்டிருக்கின்றது. 

எது நடந்தாலும் மறைந்தவர்களை அல்லது கொல்லப்பட்டவர்களை மீட்டெடுக்க முடியாது இருக்கின்றது. இருந்தாலும் அந்த குடும்பங்கள் இதுவரைக்கும் கண்ணீரில் தங்களுடைய உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்த அரசாங்கத்திடம் மிகவும் உருக்கமாக நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், கடந்த காலத்தில் இந்த குற்றவாளிகளை மறைப்பதற்காகவும், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்காகவும் பாரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த குற்றத்தை கண்டுபிடிக்க முடியாமலும், இறந்தவர்களுக்கு, கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க முடியாத நிலையிலும் மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு நடைபெற்றது. 

இப்போதைய நிலையில் கொஞ்சம் எங்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கின்றது. இந்த குற்றச் செயலை செய்வதற்காக ஒரு அரசுத் துறையில் இருந்து கூட ஒரு பெரிய குற்றவாளி செயற்பட்டதாக நாங்கள் அறிகின்றோம். 

அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றோம். அவரை முழுமையாக விசாரணை செய்து எத்தனை திசைதிருப்பல்கள் ஏற்பட்டாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, இந்த கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதை நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன். 

தயவு செய்து நான் கேட்கின்ற விடயம் என்னவென்றால், இது உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் குற்றம் செய்யாதவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, உண்மையான குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

title