Header Logo

செய்திகள்
குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது

Apr 21, 2026 - 01:25 PM -

0

குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான பாணதுறை குடு சலிந்து என்ற மல்ஷித சலிந்துவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் பாயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இருவரும் பாயாகல பகுதியில் இரகசியமாகத் தங்கியிருந்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (21) அதிகாலை பாயாகல நிர்மலவத்த மற்றும் கும்புகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பெத்தா என்ற பெத்தும் மற்றும் கவியா என்ற கவிந்து என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பெத்தும் என்பவரிடமிருந்து 42,350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், கவிந்து என்பவரிடமிருந்து 48,170 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

title