Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் அவர்கள், மூன்று தசாப்த கால சிறப்பான சேவையின் பின்னர் ஓய்வு பெறுகிறார்

Apr 21, 2026 - 04:56 PM -

0

கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். பிரபாகர் அவர்கள், மூன்று தசாப்த கால சிறப்பான சேவையின் பின்னர் ஓய்வு பெறுகிறார்

கொமர்ஷல் வங்கி, அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு. எஸ். பிரபாகர் அவர்களின் ஓய்வை அறிவித்துள்ளது. இவ் ஓய்வானது 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருவதுடன், அவரது 30 வருடங்களுக்கும் மேலான அர்ப்பணிப்புமிக்க சேவையையும் நிறைவு செய்கிறது. 

பரந்த மற்றும் பல்வேறுபட்ட அனுபவங்களைக் கொண்ட ஒரு சிரேஷ்ட வங்கியியல் நிபுணரான திரு. பிரபாகர், வங்கியின் பல முக்கிய செயற்பாடுகளில் முன்னணியில் இருந்துள்ளதுடன், மே 2022 இல் அவர் பிரதம செயற்பாட்டு அதிகாரி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. தனது பணிக்காலத்தில், வங்கியின் முக்கிய செயற்பாடுகளை வலுப்படுத்துவதிலும், செயற்திறனை ஊக்குவிப்பதிலும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வங்கியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் அவர் ஒரு முக்கிய பங்கினை வகித்தார். 

திரு. பிரபாகரின் ஆரம்பகால தலைமைத்துவப்பங்கில், கொழும்பில் உள்ள நடுத்தர மற்றும் பெரிய கிளைகளின் முகாமையாளராகப் பணியாற்றியமை அடங்குவதுடன், அங்கு அவர் செயற்திறனை வெற்றிகரமாக மாற்றியமைத்தமைக்காகவும், செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தியமைக்காகவும் அங்கீகரிக்கப்பட்டார். பங்களாதேஷில் அவர் பணியாற்றிய காலத்தில் அவரது சர்வதேச அனுபவம் வெளிப்பட்டதுடன், அங்கு அவர் வங்கியின் செயற்பாடுகளுக்கான பிரதம செயற்பாட்டு அதிகாரியாகவும் வதிவிட முகாமையாளராகவும் (Country Manager) பணியாற்றினார். அவரது வழிகாட்டலின் கீழ், பங்களாதேஷில் வங்கியின் பிரசன்னமானது, இரண்டு கிளைகள் மற்றும் இரண்டு சேவை நிலையங்களை மட்டுமே கொண்ட செயற்பாட்டிலிருந்து 19 கிளைகளைக் கொண்ட வலையமைப்பாக கணிசமாக விரிவடைந்தது. இந்த செயற்பாடானது நாட்டில் உள்ள 10 வெளிநாட்டு வங்கிகளில் மூன்றாவது அதிக இலாபம் ஈட்டும் வங்கியாக உருவெடுத்ததுடன், கொமர்ஷல் வங்கியின் ஒட்டுமொத்த இலாபத்தில் சுமார் 15% பங்களிப்பை வழங்கியதுடன், நாட்டின் முன்னணி கடன் தரப்படுத்தல் முகவரமைப்பான CRISL இடமிருந்து AAA கடன் தரப்படுத்தலையும் பெற்றுக்கொண்டது. 

அவர் ஓய்வுபெறும் போது, Commercial Bank of Maldives (Pvt) Ltd இன் சுயாதீனமற்ற, நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும், Lanka Financial Services Bureau (Private) Limited இன் பணிப்பாளராகவும் பணியாற்றினார். அவரது முந்தைய நியமனங்களில், CBC Myanmar Microfinance Company Ltd இன் பணிப்பாளராகவும், Orysis Limited இன் நிறைவேற்றதிகாரமற்ற பணிப்பாளராகவும் பணியாற்றியமை அடங்கும். இலங்கையில் Blockchain தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழுவிற்கும் அவர் தலைமை தாங்கினார். 

இலங்கையில், திரு. பிரபாகர் பல முக்கியமான செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளார். உள்ளக கணக்காய்வுத் தலைவராகவும், உதவிப் பொது முகாமையாளராகவும், அவர் நிர்வாக மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தியதுடன், செயற்பாடுகளுக்குப் பொறுப்பான உதவிப் பொது முகாமையாளராக அவர் முக்கிய செயற்பாட்டு முன்முயற்சிகளை முன்னெடுத்தார். பின்னர் அவர் பிரதிப் பொது முகாமையாளராக பெருநிறுவன வங்கிப்பிரிவை வழிநடத்தினார், இந்தப் பதவியையே அவர் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வகித்தார். 

தனது பணிக்காலம் முழுவதும், திரு. பிரபாகர் பரந்த வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகள் கட்டமைப்புக்கு சுறுசுறுப்பாகப் பங்களிப்புச் செய்தார். இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய கொடுப்பனவுச் சபையில் (National Payment Council) அவர் வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அத்துடன் நிதியியல் குறைகேள் செயற்பாடுகளில் வங்கியின் நிதியியல் குறைகேள் அதிகாரியாகவும் பணியாற்றினார். முழுத் தொழில்துறை ரீதியான செயற்பாட்டுச் சவால்களைத் தீர்ப்பதற்காக இலங்கை வங்கியாளர் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட வங்கியாளர் தொழில்நுட்ப உதவிக் குழுவில் வங்கியின் பிரதிநிதியாகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். 

மூன்று தசாப்த கால சேவையில் திரு. பிரபாகரின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை கொமர்ஷல் வங்கி நன்றியுடன் அங்கீகரித்துள்ளதுடன், வங்கியின் செயற்பாட்டுச் சிறப்பு மற்றும் பிராந்திய விரிவாக்கத்தில் அவரது தலைமைத்துவம், தொழில்முறைத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டு, அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title