Header Logo

வணிகம்
SLT-MOBITEL கண்டி வாடிக்கையாளர் கழகத்தின் 10 வருட பூர்த்தி சமூக நலன்புரிச் செயற்பாட்டுடன் வாடிக்கையாளர் விசுவாசத்தை மாற்றியமைக்கிறது

Apr 21, 2026 - 04:59 PM -

0

SLT-MOBITEL கண்டி வாடிக்கையாளர் கழகத்தின் 10 வருட பூர்த்தி சமூக நலன்புரிச் செயற்பாட்டுடன் வாடிக்கையாளர் விசுவாசத்தை மாற்றியமைக்கிறது

SLT-MOBITEL கண்டி வாடிக்கையாளர் கழகம், 2015ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, பிராந்தியத்தின் SLT‑MOBITEL இன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட விறுவிறுப்பான சமூக அமைப்பாக செயலாற்றுகிறது. ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, நிபுணர்கள், தொழில்முயற்சியாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கண்டி பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஈடுபாட்டை பேணக்கூடிய சிறந்த களமாக இந்தக் கழகம் அமைந்துள்ளது. இவர்கள் நிலைத்திருக்கும் உறவை கட்டியெழுப்பல், அறிவுப் பகிர்வு மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டும் செயற்பாடுகளில் பங்களிப்புகளை வழங்கல் மற்றும் SLT‑MOBITEL உடன் உறவை கட்டியெழுப்பல் போன்றவற்றில் பங்களிப்பு வழங்குகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும், கல்வி, சுகாதாரம், சூழல், விளையாட்டு, விநோத அம்சங்கள் மற்றும் இதர ESG- தொடர்புடைய செயற்பாடுகளில் கண்டி வாடிக்கையாளர் கழகம் கவனம் செலுத்தி, பிரதான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறது. இவற்றில் அங்கத்தவர்கள் முக்கிய பங்காற்றுவதுடன், அவற்றினூடாக, சமூகங்களுக்கு நேரடியாக அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, இந்த சமூகங்களில் கவனம் செலுத்தும் செயற்பாடுகளினூடாக பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். 

இந்த ஆண்டு, SLT‑MOBITEL கண்டி வாடிக்கையாளர் கழகம் தனது 10 வருட பூர்த்தியை கொண்டாடியதுடன், கண்டி டெவொன் ஹோட்டலில் தனது 10வது வருடாந்த பொது ஒன்றுகூடலை முன்னெடுத்திருந்தது. இதன் போது, கடந்த 10 வருடங்களாக அங்கத்தவர்கள் ஆற்றியிருந்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் SLT‑MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ரோஹன எல்லாவலவினால் நினைவுச் சின்னங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. 

இந்நிகழ்வில் ரோஹன எல்லாவல கருத்துத் தெரிவிக்கையில், “எமது முன்னேற்றத்தின் பங்காளர்களாக வாடிக்கையாளர்கள் திகழ்கின்றமைக்கான ஆதாரமாக கண்டி வாடிக்கையாளர் கழகம் அமைந்துள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆக்கத்திறன் போன்றவற்றினூடாக, சமூகங்களுக்கு வலுவூட்ட முடிந்ததுடன், பகிரப்பட்ட பெறுமதிகளை ஏற்படுத்தவும் முடிந்துள்ளது. ஒன்றிணைந்து இந்த மைல்கல்லை கொண்டாடுவதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், நாடு முழுவதிலும் இந்த வாடிக்கையாளர் கழக மாதிரியை விஸ்தரிப்பு செய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

உயர் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுடன் நிலைத்திருக்கும் உறவை கட்டியெழுப்பும் வகையில் SLT‑MOBITEL வாடிக்கையாளர் கழகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக, தொடர்பை ஏற்படுத்தல், இணைந்து செயலாற்றல் மற்றும் சமூகத்துக்கு பங்களிப்பு வழங்கல் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த கழகங்கள் மக்களை இணைத்தல், சமூகங்களுக்கு வளமூட்டல் மற்றும் பகிரப்பட்ட பெறுமதியை ஏற்படுத்தல் எனும் SLT‑MOBITEL இன் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. 

கடந்த தசாப்த காலப்பகுதியில் கண்டி வாடிக்கையாளர் கழகத்தின் வெற்றிகரமான செயற்பாட்டினூடாக, அர்த்தமுள்ள மாற்றத்தை முன்னெடுப்பதில் வாடிக்கையாளர் குரல்களின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதிலும் SLT‑MOBITEL வாடிக்கையாளர் கழகங்கள் விரிவாக்கப்படுகின்றன. அதனூடாக மேலும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி, பங்களிப்புச் செய்து, அவர்களுக்கு முக்கியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும். இந்தக் கழகங்கள், தொடர்ந்தும் சமூக விருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய பங்கை வழங்கும் பகுதியாக அமைந்திருக்கும் என்பதுடன், உண்மையான பங்காண்மைகளினூடாக SLT‑MOBITEL இன் நோக்கான வாழ்வுக்கு வலுவூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!