Apr 21, 2026 - 05:04 PM -
0
உயர்தர வலையமைப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து, SLT-MOBITEL மொபைல், Ookla® இன் இலங்கையின் #1 சிறந்த மொபைல் வலையமைப்பு எனும் கௌரவிப்பை Mobile World Congress 2025 இல் பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டு பகுதிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட இணைய வினைத்திறன் பரிசோதனை மற்றும் பகுப்பாய்வுகளின் பிரகாரம் வழங்கப்பட்ட, சிறந்த மொபைல் வலையமைப்பு விருதினூடாக, வேகமான, ஒப்பற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் இணையப் பாவனை அனுபவங்களில் SLT-MOBITEL இன் அசைக்க முடியாத ஆதிக்கம் மேலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டிகரத்தன்மை வாய்ந்த தொலைத்தொடர்பாடல் துறையில், Ookla® இடமிருந்தான சுயாதீன உறுதிப்படுத்தலினூடாக, தரமான புரோட்பான்ட் அனுபவத்திற்கான இலங்கையர்களின் வலையமைப்பு தெரிவு எனும் நிலை மேலும் மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கௌரவிப்பு, Ookla இனால் தொடர்ந்தும் வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்ட சிறப்பு கௌரவிப்புகளில் மற்றுமொரு உள்ளடக்கமாக அமைந்துள்ளது. முன்னர், 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வேகமான 4G வலையமைப்பு கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டதுடன், 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வேகமான மொபைல் வலையமைப்பிற்கான கௌரவிப்பையும் SLT-MOBITEL பெற்றுக் கொண்டது.
Ookla-வின் அதிவேக மொபைல் வலையமைப்புக்கான Speedtest விருது, அதன் பதிவிறக்க வேகம், பதிவேற்ற வேகம் மற்றும் Latency ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் Speed Score எனும் செயன்முறையை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஒருங்கிணைந்த புள்ளிகள், ஒரு வலையமைப்பானது அன்றாடப் பயன்பாட்டில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதைப் பிரதிபலிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் உண்மையான அளவீடாகவும் அமைகின்றது.
இந்த அங்கீகாரமானது, இலங்கையில் 5G தொழில்நுட்பத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனது முயற்சிகளில் SLT-MOBITEL கொண்டுள்ள நிலையான தலைமைத்துவத்தையும், முன்னோடிச் சாதனைகளையும் மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இந்த உத்வேகத்தைப் பயன்படுத்தி, SLT-MOBITEL அடுத்த தலைமுறை உட்கட்டமைப்பு வசதிகளில் தொடர்ந்து முதலீடு செய்வதுடன், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தவும், ஸ்ட்ரீமிங், கேமிங், ரிமோட் பணி மற்றும் ஸ்மார்ட் வாழ்க்கை முறை உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிநவீன தீர்வுகளை அறிமுகப்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
அதிவேக Fibre மற்றும் 5G தொழில்நுட்பங்களுடன் தனது வலையமைப்புகளை நவீனமயப்படுத்துவதன் மூலம், தடையற்ற இணைப்புத்திறன் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை வழங்கும் அதேவேளை, எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட்ட சேவைகளின் ஊடாக மக்களின் வாழ்க்கை முறையைச் செழுமைப்படுத்தவும், வணிகங்களை வலுப்படுத்தவும் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
இந்த முதலீடுகள் இனி நகரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. SLT-MOBITEL தனது புரோட்பான்ட் மற்றும் மொபைல் வலையமைப்பு விரிவாக்கத்தை கிராமப்புறங்களுக்கும் விஸ்தரித்துள்ளதுடன், கிராமங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றது. இதன் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு சமூகங்களுக்கு வழிவகை செய்வதுடன், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தில் அனைத்து மக்களும் பங்காளர்களாவதை இது உறுதிப்படுத்துகின்றது.
இடமிருந்து - Ookla® மென்பொருள் பொறியியல், சிரேஷ்ட உப தலைவர் அன்ஸி தவுரிஎய்னன், மொபிடெல் பிரைவட் லிமிடெட் விநியோக சங்கிலி தொடர் முகாமைத்துவ பிரதம அதிகாரி ஜீவபத்ம சந்தகோமி, SLT மற்றும் eChannelling PLC இன் பணிப்பாளர் சபை அங்கத்தவர் சந்திரசிறி களுபஹான, SLT குழுமத்தின் தவிசாளர் மோதிலால் டி சில்வா, SLT-MOBITEL பணிப்பாளர் சபை அங்கத்தவர் திலக் திலகரட்ன, Ookla® பிரதம மூலோபாய அதிகாரி சிப் ஸ்ட்ரேன்ஜ் ஆகியோர் காணப்படுகின்றனர்.
