Header Logo

இந்தியா
எல்லா மதமும் என் மதம்தான்!

Apr 21, 2026 - 05:33 PM -

0

எல்லா மதமும் என் மதம்தான்!

தமிழ்நாட்டில் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (21) உடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரையின் கருத்து தெரிவித்தார். 

அவர் தெரிவித்ததாவது, 

தவெக - திமுக இடையில் தான் போட்டி என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 

தனது வாழ்க்கையை மட்டும் உயா்த்திக்கொண்ட முதல்வர் தமிழ்நாட்டை கடன் சுமையில் தள்ளிவிட்டுள்ளார். 

எம்மதமும் நம்மதம் என்பதே என் முகம், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா்களுக்கான ஆளாகத்தான் நான் இருப்பேன், எல்லா மதமும் என் மதம்தான். 

பாஜகவுக்கும், திமுகவுக்கும் அண்டர்கிரவுண்ட் டீலிங் இருக்குன்னு நான் இரண்டு ஆண்டுக்கு முன்பே சொன்னேன், நான் சொன்ன குற்றச்சாட்டை தான் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது சொல்லியிருக்கிறார் 

இந்த தோ்தலில் திமுக தோற்கப்போவது உறுதி. புதுச்சோியை போல் தமிழ்நாட்டிலும் 90 சதவீத வாக்குகள் பதிவாகும் என உறுதியாக கூறுகிறேன். 

எத்தனை வேலை இருந்தாலும், எங்கு இருந்தாலும் இங்கு வந்து ஓட்டுப்போடுங்கள், திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், திமுகவின் ஆட்சி கனவு, லஞ்ச கனவு எல்லாம் கதம் கதம்தான். 

10 முறை தோற்ற ஒருவா், இன்னும் திருந்தாத ஒருவா் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியில் வரமாட்டாா் எனக்கூறுகிறாா். சேலத்திற்கு பக்கத்தில் இருக்கும் தொகுதியில் பதுங்காமல் வேறு தொகுதிக்கு செல்ல முடியுமா? 

சட்டமன்ற தோ்தலில் திமுக வெல்லும் எனக்கூறுவது கருத்துக்கணிப்புகள் இல்லை கடுப்பு கணிப்பு. 

60 வயதிற்கு மேல் இருக்கும் என் அம்மா, பாட்டி, தாத்தா எல்லாம் நம்ம வீட்டுப்பிள்ளை விஜி எனக்கூறுவது உங்களுக்கு கேட்கவில்லையா? 

சட்டமன்ற தோ்தலில் தோற்ற பின்னா் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க மோடி, அமித்ஷா கால்களில் திமுக விழுவது உறுதி தோ்தலில் தோற்ற பின்னா் திமுகவின் உண்மை முகம் உங்களுக்கு தொியவரும். 

நான் நடிகன் தான், ஆனால் அரசியலில் நடிக்கவில்லை, அரசியல் இருந்து கொண்டே நாடகம் நடிக்கும் நீங்கள் தான் நடிகா்கள். 

அண்மையில் நேர்காணல் ஒன்றில் தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அவர் ஒரு நல்ல நடிகர்” என குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று தனது பரப்புரையில் விஜய் பேச்சு 

10 முறை தோற்ற ஒருவா், இன்னும் திருந்தாத ஒருவா் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியில் வரமாட்டாா் எனக்கூறுகிறாா் 

சேலத்திற்கு பக்கத்தில் இருக்கும் தொகுதியில் பதுங்காமல் வேறு தொகுதிக்கு செல்ல முடியுமா? 

கரூர் சம்பவத்தில் நீங்கள் எதுவுமே பண்ணாதபோது 20 ஆண்டுகளாக கரூரில் போட்டியிட்ட உங்கள் அடிமையை ஏன் கோவைக்கு அனுப்புனீங்க என கேள்வி கேட்டார். 

வாக்குப்பதிவு நாளில் மட்டும் நான் சொல்வதை கேளுங்கள், அடுத்து வரும் 5 ஆண்டுகள் மட்டுமல்லாமல் எல்லா வருடமும் நீங்கள் சொல்வதை நான் கேட்பேன். 

ஊழலிலேயே ஊறிக்கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளும் வேண்டாம், புதுசா ஃபிரஷ்ஷா ஒருவரை கொண்டு வருவது தான் மாற்றம். 

மாறிமாறி இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு போடுவதால் மாற்றம் ஏற்படாது, போகி பண்டிகையை போல் 75 வயது பவளவிழா பாப்பா, 55 வயது பல்லாங்குழி பாப்பாவை தூக்கி எறிவோமா? 

ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒரே கூட்டணியில் இருப்பதால் என்னை எதிர்க்கிறார்கள். 

கரூாில் என்ன நடந்தது என்று கரூா் மக்களை கேட்டாலே புட்டு புட்டு வைப்பாா்கள், என் மேல் ஏன் பழியை தூக்கிப்போட்டீா்கள்?, நாங்கள் அரசியலே பண்ண மாட்டோம் என வீடியோ வெளியிட்டு விட்டு சட்டப்பேரவையில் என் மீது பழி போட்டது ஏன்?, பொலிஸார் அனுமதி கொடுத்த நேரத்தில் நான் கரூரில் இருந்தேன். 

உலகமே நேரலையில் என்னை பாா்த்துக்கொண்டிருந்த போது மனசாட்சியே இல்லாமல் என் மீது பழி போட்டது ஏன்?, நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மண் அள்ளிப்போட்டேனா?, என் மீது ஏன் இத்தனை வஞ்சம்?. 

விஜய் மாமா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, இந்த தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அடம் பிடியுங்கள் குழந்தைகளே, 

சாக்லேட் வேண்டும் என அடம்பிடிப்பதை போல் தவெகவிற்கு ஓட்டு போடுங்கள் என அடம்பிடியுங்கள் குழந்தைகளே, 

வீட்டில் யாராவது ஓட்டு போடாமல் இருந்தால் அன்பாக காதிலேயே விசில் ஊதி ஓட்டுப்போட வையுங்கள் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title