Apr 21, 2026 - 06:22 PM -
0
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று (21) மாலை 6 மணியுடன் ஓய்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (23) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (23ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்தார்.
தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டால் அல்லது பிரசாரம் செய்தால், சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும் 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வசதியாக நாளை மறுதினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
