Header Logo

செய்திகள்
அமெரிக்காவின் பிடியில் சிக்கிய 'ஈரான்' தொடர்பு கப்பல்!

Apr 21, 2026 - 07:05 PM -

0

அமெரிக்காவின் பிடியில் சிக்கிய 'ஈரான்' தொடர்பு கப்பல்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 'மெரீன் ட்ராஃபிக்' (Marine Traffic) தரவுகளின்படி, இது சுமார் 3 இலட்சம் தொன் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் கப்பலாகும். இந்தக் கப்பலுக்கு ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் இந்திய கப்பல் நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையது என்ற தகவலும் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பல் ஏப்ரல் 10 ஆம் திகதி வளைகுடா பிராந்தியத்திலிருந்து புறப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கையின் காலி துறைமுகத்திற்கு அருகாமையில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் சர்வதேச ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title