Header Logo

செய்திகள்
காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

Apr 21, 2026 - 11:43 PM -

0

 காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

வர்த்தக விசா  மூலம் நாட்டிற்கு வருகை தந்து, அவற்றின் காலாவதித் திகதி முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் இன்று (21) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 47 சீனப் பிரஜைகளும், இரண்டு மலேசியப் பிரஜைகளும், ஒரு இந்தியப் பிரஜையும் அடங்குகின்றனர்.

நீர்க்கொழும்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title