Header Logo
SLIC
கிழக்கு
சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Apr 22, 2026 - 11:54 AM

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

தனது கோழிக் கடையைச் சுத்தம் செய்யும்போது மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் நேற்று (21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சாரம் தாக்கிய நிலையில் அயலவர்களால் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் அளவில் அவர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மாலை வேளையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளைக்கமைய, பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்டார். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சடலம் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. 

கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகிப் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278