Header Logo

செய்திகள்
சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்

Apr 22, 2026 - 12:08 PM -

0

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி விளக்கமறியலில்

சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி (ஓய்வு) ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில், சுகாதார அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்துள்ளார்.

குறித்த குத்தகைக் காலத்தை நீடிப்பதற்காக மூன்று குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்தமைக்காக, அதற்குரிய கட்டணம் எனக் கூறி 4,134,887/- ரூபாயைக் கோரியுள்ளார். அதில் 2,000,000/- ரூபாயை ஏற்கனவே பெற்றுக்கொண்ட அவர், எஞ்சிய தொகையையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எஞ்சிய தொகையிலிருந்து 5 இலட்சம் ரூபாயை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் மக்கள் வங்கியில் பேணப்படும் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலை ஒன்றின் ஊடாக பணமாகப் பெற்றுக்கொண்ட போது,  இலஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (21) பிற்பகல் 3.45 மணியளவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

title