Header Logo

ஏனையவை
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Apr 22, 2026 - 12:26 PM -

0

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மாதம்பை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிதியாவ பிரதேசத்தில் வைத்து பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன், சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 43 வயதுடையவர் எனவும் அவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

மாதம்பை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்று மாலை குறித்த பகுதியில் மாதம்பை பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் பயணித்த லொறி ஒன்றை சோதனை செய்தனர். 

இதன்போது குறித்த லொறியில் கொண்டு செல்லப்பட்ட 216,000 போதை மாத்திரைகளுடன், லொறியில் பயணித்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த போதை மாத்திரைகள் கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் இருந்து விற்பனை நோக்கில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!