Header Logo

வடக்கு
குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

Apr 22, 2026 - 12:34 PM -

0

குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது. இந்தத் தீவகப் பகுதி மக்கள் எதிர்பார்த்திராத பல மிகப் பெரிய அபிவிருத்திகள் இனி நடக்கும். அந்த நல்ல மாற்றங்களை இங்குள்ள மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட பங்கேற்புடன் இன்று (22) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, 

வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்குரிய பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இது எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. குறிப்பாக, நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் இந்த இறங்குதுறையில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதில் பெரும் இடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அதற்கான நிரந்தரத் தீர்வும் தற்போது எட்டப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவகப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது. இப்பகுதிகளின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த இறங்குதுறை புனரமைக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் நெடுந்தீவு இறங்குதுறையையும் புனரமைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. 

இந்த இறங்குதுறையானது 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்திலேயே புனரமைக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் இவ்வளவு பெரிய தொகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்கள் அல்லது உதவிகள் ஊடாகவே செய்யப்பட்டன. ஆனால், தற்போது இலங்கை அரசாங்கத்தின் சொந்த நிதியில், அதாவது மக்களின் வரிப்பணத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அபிவிருத்தித் திட்டம் தீவக மக்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். 

இதற்காக உழைத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இந்த அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் துரித கதியில் அபிவிருத்திகள் நடைபெறுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. எப்படியாவது தேவையற்ற கருத்துகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றனர். 

உண்மையில், அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்துக்கு அரசாங்கம் காரணமல்ல. ஒரு சில அரச திணைக்களங்கள்தான் அதற்குக் காரணமாகின்றன. அவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு, அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும் என தெரிவித்தார். 

இந்தக் குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், நெடுந்தீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

title