Header Logo

செய்திகள்
323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்றும் கூடுகிறது

Apr 22, 2026 - 01:03 PM -

0

323 கொள்கலன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்றும் கூடுகிறது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அதற்கான பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் சாட்சிகளை அழைப்பதற்கான யோசனை ஒன்றை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் துறைமுகங்கள் அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்க ஆகியோரை சாட்சியமளிக்க அழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர். 

மேலதிகமாக, அக்காலப்பகுதியில் துறைமுகங்கள் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய ஜனித ருவன் கொடிதுவக்கு மற்றும் அப்போதைய நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சி உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் டி.வி. சானக்க ஆகியோரின் கையொப்பத்துடன் கூடிய இந்த கடிதம், குழுவின் தலைவரான நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் கூடவுள்ள இக்குழுவின் கூட்டத்தின் போது, குறித்த சாட்சியாளர்களை அழைப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா "அத தெரண"விற்குத் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

title