Apr 22, 2026 - 02:06 PM -
0
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மெகா வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜெயிலர்’. இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, யோகிபாபு உள்பட பலர் நடித்தனர். சிவ ராஜ் குமார், மோகன்லால் கவுரவ வேடத்தில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் 600 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையடுத்து இதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இதன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. படக்குழுவினர் ரஜினிகாந்துடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
