Header Logo

வடக்கு
யாழில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பலி!

Apr 22, 2026 - 05:54 PM -

0

யாழில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் பலி!

நேற்று (21) இரவு உறவினரை வைத்தியசாலையில் பார்த்துவிட்டுத் திரும்பிய தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரைப் பார்வையிடுவதற்காகத் தந்தையும் மகனும் சென்றுள்ளனர். 

பின்னர் அவர்கள் இருவரும் இரவு வேளையில் திருநெல்வேலியிலிருந்து பலாலி நோக்கி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது உரும்பிராய் சந்தியில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பட்டா ரக வாகனம் மோதியுள்ளது. இவ்விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. விபத்தில் பலியானவர்கள் 64 வயதுடைய தந்தையும், 23 வயதுடைய மகனும் ஏழாலை கிழக்கு, ஏழாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

சடலங்கள் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

--

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title