Header Logo

செய்திகள்
பொலிஸ் அதிகாரியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு

Apr 23, 2026 - 12:56 PM -

0

பொலிஸ் அதிகாரியை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிப்பு

பத்தேகம பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்த பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

18 ஆண்டுகால நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், பலபிட்டிய மேல் நீதிமன்றத்தினால் நேற்று (22) இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பத்தேகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, ஒரு ஆண் பிரதிவாதி மற்றும் மூன்று பெண் பிரதிவாதிகளுக்கு எதிராக பத்தேகம பொலிஸாரால் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அங்கு, நான்காவது பிரதிவாதிக்கு மரண தண்டனையும், ஏனைய மூவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தும் பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதவான் ருசிர வெலிவத்த உத்தரவிட்டார். 

அதன்படி, பத்தேகம காமிங்கல, மார்க சதி மாவத்தையைச் சேர்ந்த மெரெஞ்சி கங்கானம்கே பிரசாத் மனோரஞ்சன என்ற 'களுத்துறை சூட்டி' என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

விடுதலை செய்யப்பட்டவர்களில் இரண்டாவது பிரதிவாதியான குணத்திகொட லீலாவதி என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். 

2008 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், பத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திலீப் குமாரசிங்க (15615) மற்றும் ஜகத் நந்தன (50472) ஆகிய இரு அதிகாரிகளும் சுற்றிவளைப்பு ஒன்றிற்காகச் சென்றிருந்தனர். 

அங்கு, பலாபிட்டிய ரந்தொம்பே பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் திலீப் குமாரசிங்க (15615) என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு ஆண் பிரதிவாதி மற்றும் மூன்று பெண் பிரதிவாதிகளுக்கு எதிராக பத்தேகம பொலிஸாரால் பலாபிட்டிய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதி வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title