Header Logo

வணிகம்
Shangri-La இலங்கையில் “Golden Hour” எனும் புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது

Apr 23, 2026 - 01:26 PM -

0

Shangri-La இலங்கையில் “Golden Hour” எனும் புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது

மாலை சாய்ந்து, இரவின் அமைதியான சூழல் மெதுவாக விரியும் அந்த இனிய நேரத்தில், Shangri-La Colombo மற்றும் Shangri-La Hambantota ஆகியவற்றில் புதிய cocktail அனுபவத்தை வழங்க Shangri-La முன்வந்துள்ளது. அத்துடன், Shangri-La Colombo இல் மாலைப்பொழுதை இனிதே செலவிடக்கூடிய வகையில் புதிய Tiki Bar ஐயும் அறிமுகம் செய்துள்ளது. 

வழமையான cocktail களுக்கான happy hour என்பதிலிருந்து விலகி, நேரத்தை மெதுவாக அனுபவிக்கச் செய்யும், சுவைகளின் ஆழத்தை உணர்த்தும், அந்த இனிய தருணங்களை நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் ஒரு புலன்சார் அனுபவமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

Shangri-La வின் ஆசிய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, அதன் அடையாளமான பொன்னிற “S” சின்னத்தால் ஈர்க்கப்பட்ட இந்த தினசரி நிகழ்வு, பகலும் மாலையும் சந்திக்கும் அந்த மயக்கும் நேரத்தை ரசிக்க அழைப்பு விடுக்கிறது. மேலும், விருந்தினர்கள் தங்களையும், சுற்றுப்புறத்தையும், அந்த நிமிடத்தையும் மீண்டும் இணைத்துக் கொள்ளும் ஒரு தனித்துவமான அனுபவமாக இது அமைகிறது. 

Shangri-La Colombo இல் இந்த அனுபவத்தை நகரின் மையத்தில், கரையோர கடல் காட்சிகளுடன், வானுயர்ந்த பகுதிகளில் அமர்ந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை Shangri-La வழங்குகிறது. Capital Bar & Grill மற்றும் Tiki Bar ஆகிய பகுதிகளில் விருந்தினர்கள் ஒன்றுகூடி, cocktailகளையும், அவற்றுக்கு பொருத்தமான பக்க உணவு வகைகளையும் (bite) விறுவிறுப்பான சமூக சூழலில் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். 

அத்துடன், இல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Tiki Bar இல், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள Cocktail மெனுவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பானமும் இலங்கையின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கின்றன—வாசனைத் திரவியங்கள், புளிப்புச் சுவை, கதகதப்பு மற்றும் கைத்திறன் எனப் பல அடுக்குகளாக இவை செதுக்கப்பட்டுள்ளன. Chilli and Passion Daiquiri பானமானது அயனமண்டலப் பழங்களின் சுவையுடனும், நாவிலேயே தங்கியிருக்கும் மெல்லிய காரத்துடனும் மிக உற்சாகமான அனுபவத்தைத் தருகிறது. Coriander Fizz பானம், வறுத்த வாசனைத் திரவியங்களின் மணத்தை ஒரு மென்மையான நுரை பொங்கும் பானமாக மாற்றி, புத்துணர்ச்சியையும் இதத்தையும் வழங்குகிறது. உள்ளூர் சாராயத்தை (Arrack) அடிப்படையாகக் கொண்ட Arrack Fashioned, மிகவும் ஆழமான மற்றும் செழுமையான சுவையைக் கொண்டது. அதேவேளை, Whisky Highball பானமானது ஓர் எளிய நயத்தை வழங்குகிறது. இது இரவு நீண்ட நேரமாகத் தொடரும் உரையாடல்களுக்கு மிகப்பொருத்தமானது. 

நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள Shangri-La Hambantota இல், மேலும் வியத்தகு அனுபவத்தை வழங்கும் வகையில் Golden Hour அமைந்திருக்கும். மயில்கள் உலவும் 145 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இயற்கை நிலப்பரப்பில், இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற நீலப்பரப்பை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த அனுபவம் இயற்கையோடு பின்னிப்பிணைந்துள்ளது. Golf மைதானத்தின் மீது விழும் மாலைச் சூரியன், பனை மரங்களுக்கு இடையே ஊடுருவி வரும் பொன்னிற ஒளி மற்றும் இந்த சுற்றுலா ரிசோட்டிற்கு உரிய அமைதியான, சிந்தனையைத் தூண்டும் நிதானமான வேகம் ஆகியன இதனை முழுமைப்படுத்துகின்றன. 

இந்த Golden Hour இல், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட cocktail தெரிவுகள் Shangri-La இன் Mixology நிபுணர்களால் விசேடமாக தயாரித்து வழங்கப்படும். ஒவ்வொரு தயாரிப்பும் ஒரு கதையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் – கலாசாரம், கை வண்ணம் மற்றும் பிணைப்பு ஆகியவற்றை இந்தப் பகுதிகளுடன் பானங்களை தொடர்புபடுவதை பிரதிபலிப்பதாக அமையும். இலங்கையின் தனித்துவமான பான வகைகளில் அடங்கியிருப்பவை: 

* Purana Legacy – Shangri-La Colombo 

Chivas 18, வறுத்த தேங்காய் மற்றும் அன்னாசிப் பழத்தின் சாறு ஆகியவற்றின் கலவையில் உருவான இந்த பானம், செறிவானதும் பல அடுக்குகளைக் கொண்ட சுவைகளையும் கொண்டது. இது இலங்கைக்கு உரித்தான சுவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கௌரவமாகும்; அத்துடன் இவை மிகுந்த ஆழமான மற்றும் நேர்த்தியான சுவைப்பரிமாணத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 

* Ruby Fizz – Shangri-La Hambantota 

Infused gin, தேங்காய் மற்றும் இஞ்சி-மாதுளை மசாலா ஆகியவற்றின் கலவையில் உருவான இந்த பானம், புத்துணர்ச்சியூட்டும் ஒரு துடிப்புடன் மிளிர்கின்றது. இது தென்னிலங்கை கடற்கரையின் வெப்பத்தையும் உயிரோட்டத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கின்றது. 

இந்த cocktail தெரிவுகளுக்கு பொருந்தும் வகையில் Golden Bites களும் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை பருகும் ஒவ்வொரு குவளைக்கும் பொருந்தும் வகையில், உள்நாட்டின் சேர்மானங்கள், பிராந்தியத்தை பிரதிபலிக்கும் அம்சங்கள் மற்றும் நுணுக்கமான விருந்தோம்பல் அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். 

“Golden Hour” என்பது ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு நாடுகள் வரையிலான பல்வேறு நாடுகளில் இடம்பெறும் Shangri-La வின் ஓர் உலகளாவிய அனுபவமாக இருந்தபோதிலும், இலங்கையில் அதன் வெளிப்பாடானது இந்தத் தீவுக்கே உரித்தான தனித்துவமான பண்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பின் நவீன நகரத்துடிப்பு முதல் ஹம்பாந்தோட்டையின் இயற்கையான அழகு வரை, ஒவ்வொரு சூழலும் இந்தத் தனித்துவமான மாலை நேர நிகழ்விற்கு வெவ்வேறான மற்றும் சிறப்பான அர்த்தங்களை வழங்குகின்றன. 

Golden Hour என்பது வெறும் cocktail களைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலைமாற்றத்தைப் பற்றியதாகும். முடிந்தவற்றுக்கும், இனி வர இருப்பவற்றுக்கும் இடையிலான ஒரு கண இடைவெளி என குறிப்பிடலாம். 

ஒவ்வொரு பொன் மாலைப் பொழுதிலும், தமது விருந்தினர்களை ஒன்றுகூடி, இனிய தருணங்களை புதிய கதைகளுடன் அனுபவித்து மகிழுமாறு Shangri-La அழைக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title