Header Logo

வணிகம்
Sun Siyam பாசிகுடா கிழக்கு கரையோரத்தில் புத்தாண்டுப் பிறப்பை கொண்டாடியது

Apr 23, 2026 - 01:30 PM -

0

Sun Siyam பாசிகுடா கிழக்கு கரையோரத்தில் புத்தாண்டுப் பிறப்பை கொண்டாடியது

இலங்கையின் சகல பாகங்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் விமர்சையாக இடம்பெறுவது வழமை. இம்முறை அந்தக் கொண்டாட்டங்கள் பாசிகுடாவிலும் விமர்சையாக அமைந்திருந்தன. Sun Siyam பாசிகுடாவில், சிங்கள, தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. நாள் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வுகளில், விருந்தினர்கள் மற்றும் ஹோட்டல் அணி அங்கத்தவர்கள் கலந்து கொண்டு, பண்டிகைக் காலத்தின் பாரம்பரியச் சிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர். 

இலங்கைக் குடும்பங்களின் கலாசாரப் பண்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் அன்றைய நாள் அமைந்திருந்தது. புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட சுப நேரத்தில், The Kitchen உணவகத்தின் அடுப்பு சம்பிரதாயபூர்வமாக மூட்டப்பட்டு, பால் காய்ச்சிப் பொங்கப்பட்டது. இது நல்லுறவு, ஒற்றுமை மற்றும் சுபீட்சத்தின் வருகையை அடையாளப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மதிய வேளையிலான மற்றுமொரு சுப நேரத்தில் பாரம்பரிய சிற்றுண்டிகள் அடங்கிய விருந்துபசாரம் இடம்பெற்றது. 

ஹோட்டலின் சமையல் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பால்சோறு, கொக்கிஸ், கவும், ஆஸ்மி போன்ற பலவகையான பாரம்பரிய உணவுகள் அங்கு பரிமாறப்பட்டன. இவ்விழாவில் கலந்துகொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் இந்தப் பாரம்பரிய நடைமுறைகளை மிகுந்த ஆர்வத்துடன் அனுபவித்தனர். 

பி.ப. 3.00 மணி முதல், புத்தாண்டு விளையாட்டுகள் முன்னெடுக்கப்பட்டன. ரிசோர்ட் மைதானத்தில் சிங்கள புத்தாண்டின் பாரம்பரிய விளையாட்டுகளான கனா முட்டிய (முட்டி உடைத்தல்), கம்ப அதீம (கயிறு இழுத்தல்), பணிஸ் கேம (பணிஸ் உண்ணல்), பலூன் பிப்பிரவீம (பலூன் உடைத்தல்), கொட்ட பொர (தலையணை சண்டை), சாக்கு ஓட்டம், கரண்டி ஓட்டம், கண்கட்டி யோகட் ஊட்டல், யானைக்கு கண் வைத்தல் மற்றும் தட்டில் நாணயத்தை தேடல் போன்றன அடங்கியிருந்தன. சகல வயதுகளையும் சேர்ந்த விருந்தினர்கள் களிப்புடன் இந்தப் போட்டிகளில் பங்கேற்றிருந்ததுடன், புத்தாண்டின் கொண்டாட்டங்களை அனுபவித்திருந்தனர். 

Sun Siyam பாசிகுடா பொது முகாமையாளர் அர்ஷத் ரிபாய் கருத்துத் தெரிவிக்கையில், “சித்திரைப் புத்தாண்டு என்பது அந்தச் சூழலில் நிலவுகின்ற உணர்வுகளாலேயே முழுமை பெறுகின்றது. சுப நேரங்கள், அடுப்பு மூட்டுதல், பாரம்பரிய பலகார விருந்து மற்றும் மாலை நேர கலாசார விளையாட்டுக்கள் என சகலதும் அவற்றுக்குரிய தனித்துவமான அர்த்தங்களைக் கொண்டுள்ளன. இவற்றை உரிய முறையில் ஒன்றிணைந்து கொண்டாடும் போது, அந்த நாள் வருடத்தில் வேறெந்த நாட்களிலும் கிடைக்காத ஒரு மகத்துவத்தைப் பெறுகின்றது. எமது விருந்தினர்கள் எவ்விடத்திலிருந்து வருகை தந்திருந்தாலும், அவர்கள் ஏதோ ஒரு நிகழ்வை வெளியில் இருந்து பார்ப்பவர்களாக அன்றி, அதன் ஒரு அங்கமாகவே உணர வேண்டும் என்பது எமது நோக்கமாக இருந்தது. அத்தகைய உன்னதமான கொண்டாட்டங்களுக்கு பாசிகுடா மிகவும் பொருத்தமானதொரு தளம் என்பதை அன்றைய நிகழ்வுகள் உறுதிப்படுத்தின என நான் கருதுகின்றேன்.” என்றார். 

இந்தக் கொண்டாட்டமானது இலங்கை கிழக்கு கரையோரத்தின் ஒரு பரந்த முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. அமைதியான மற்றும் தெளிவான கடற்பரப்பைக் கொண்ட பாசிகுடா, ஏனைய பரபரப்பான சுற்றுலாத் தளங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நிதானமான சூழலை விரும்புவோரிடையே நீண்டகாலமாகப் புகழ்பெற்றது. எனினும், அண்மைக்காலமாக அதிகமானோர் இவ்விடத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இலங்கை 600,000 க்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகளை வரவேற்றதுடன், அதன் மூலம் 1.025 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. நாட்டின் இந்த சுற்றுலாத்துறை வளர்ச்சியில் கிழக்குக் கரைக்கான பங்களிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், உலக சுற்றுலா வரைபடத்தில் பாசிகுடாவை முன்னிலைப்படுத்துவதில் Sun Siyam பாசிகுடா முக்கிய பங்காற்றியுள்ளது இந்த ரிசோர்ட், தோட்டம் மற்றும் கடற்கரைச் சூழல்களில் ஒரு படுக்கையறை மற்றும் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட 34 பிரத்தியேகத் தங்குமிடங்களைக் கொண்டுள்ளது. இவை Monochrome உள்வடிவமைப்புகளுடன், பொன்னிற அலங்காரங்களுடன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

விசாலமான இடவசதி மற்றும் கடலுக்கு மிக அருகாமையிலான அமைவிடம் என்பன இத்தங்குமிடங்களுக்கு கூடுதல் மெருகூட்டுகின்றன. இங்கு வருகை தரும் விருந்தினர்கள் The Kitchen, The Cellar, The Slice and Grill, The Tea House மற்றும் The Bar ஆகிய உணவகங்களில் விதவிதமான உணவு வகைகளை அனுபவிக்க முடியும். அத்துடன், நட்சத்திரங்களுக்கு கீழ் தனிப்பட்ட முறையில் இரவு உணவை உட்கொள்ள விரும்பும் விருந்தினர்களுக்காக Destination Dinners வசதியும் இங்கு வழங்கப்படுகின்றது. மேலும், கடற்கரையோரப் படகுப் பயணங்கள் (Sailing), ஸ்பா மற்றும் நல்வாழ்வு (Wellness) சிகிச்சைகள் மற்றும் உள்ளூர் கலை மற்றும் கைவினைப் பொருட்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் என Sun Siyam பாசிகுடா ஆண்டு முழுவதும் ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை வழங்குகின்றது. 

முன்பதிவுகள் மற்றும் விசாரணைகளுக்கு, விருந்தினர்கள் +94 65 205 5555 அல்லது +94 70 242 4263 ஆகிய இலக்கங்களினூடாக ரிசோர்டை தொடர்பு கொள்ளலாம், அல்லது www.sunsiyam.com/sun-siyam- pasikudah இணையத்தளத்தைப் பார்வையிடலாம். The House of Siyam இன் பரந்த ஹோட்டல் தொடர் தெரிவுகளில் ஒன்றாக Sun Siyam பாசிகுடா அமைந்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title