Header Logo

வடக்கு
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

Apr 24, 2026 - 02:58 PM -

0

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பான கவனயீர்புப் போராட்டம் இன்று (24) காலை மகாவலித்துறையில் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்த வருகின்றனர். 

மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான காணப்படும் நெடுந்தீவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டு வருகின்ற போதிலும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை. 

குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது. அதிலும் எண்பது பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றச் செல்லமுடிகிறது இதனால் நேயமற்ற மற்றும் அவசர தேவை கொண்ட பொதுமக்கள் பயணிக்க முடியாது புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது. 

குறித்த போராட்டத்தில் பிள்ளைளைகளுக்கான கல்வி வேண்டும், சாறாப்பிட்டி நன்னீரை தாரை வார்க்காதே!, வரிசை யுகம் எப்போது முடியும், சுத்தமான குடிநீர் வேண்டும், நெடுந்தாரகைக்குள் வதைக்காதே மனிதர்களாய் நடத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கருப்பு துணிகளை கட்டியும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை உருவாக்கும் வகையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கறுப்பு கொடிகளைத்தாங்கியவாறு மகாவலி இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை மக்கள் பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மகஜர்களைக் கையளித்தனர். 

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார் அவரிடமும் போராட்டக்காரர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குரிய மகஜரை கையளித்தனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

title