Header Logo
SLIC
பல்சுவை
சச்சினின் ஒருநாள் வருமானம் இவ்வளவு கோடியா?

Apr 27, 2026 - 05:11 PM

சச்சினின் ஒருநாள் வருமானம் இவ்வளவு கோடியா?
Mobitel Inner 1278
EDEX Inner

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், 13 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2013 இல் ஓய்வு பெற்றார். ஆனாலும் அவரது புகழ் இன்னும் மறையாமல் உள்ளது. டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர், அத்துடன் அதிக சர்வதேச ஓட்டங்கள் மற்றும் அதிக சதம் அடித்தவர் உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், இன்றும் உலகளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் டெண்டுல்கர் தொடர்கிறார். இவருடைய சொத்து மதிப்பு இன்றைய சூழலில் சுமார் 1,415 - 1,470 கோடி ரூபா. ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்களில் இவரே உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தற்போது பிரபல வீரராக இருக்கும் விராட் கோலியை விடவும் ஓய்வுபெற்ற சச்சினின் நிகர மதிப்பு அதிகம். 

சச்சினின் சொத்து கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 600 கோடி அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்றும் சச்சின் பெறும் ஒருநாள் வருமானம் எவ்வளவு என்றால் ஆச்சரியப்படுவீர்கள். 13 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற சச்சினினுக்கான மவுசு விளம்பர உலகில் சற்றும் குறையவில்லை என்றால் மிகையல்ல. 

பிரபலமான Kroll Celebrity Brand Valuation மற்றும் Outlook Business (ஏப்ரல் 2024 & 2026) அறிக்கைகளின்படி, சச்சின் டெண்டுல்கர் விளம்பரப் படப்பிடிப்புகள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒரு நாளைக்கு 7 கோடி ரூபா முதல் 10 கோடி ரூபா வரை கட்டணமாகப் பெறுகிறார். ஒரு ஓய்வு பெற்ற வீரர் ஒருநாள் வருமானமாக இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது உலக அளவில் மிக அபூர்வம். 

தற்போது விளையாடும் முன்னணி இளம் வீரர்கள் கூட இந்த அளவு தொகையை ஒருநாள் ஊதியமாக பெறவில்லை என்பதே நிதர்சனம். விளம்பர உலகில் சச்சினுக்கு இருக்கும் மவுசு தான் அவரின் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கும் ஒரு காரணம். பழைய மற்றும் புதிய என பல நிறுவனங்களுக்கு சச்சின் பிராண்ட் தூதராக இருக்கிறார். அப்போலோ டயர்ஸ், BMW, Adidas, MRF, மற்றும் Pepsi ஆகியவை அவர் ஏற்கனவே தூதராக இருந்த நிறுவனங்கள். 

இப்போதும் இதில் சச்சின் தொடர்கிறார். இது தவிர, Spinny, Unacademy, Luminous Power ஆகிய புதிய நிறுவனங்களிலும் சச்சின் இணைந்துள்ளார். இவற்றுக்கான விளம்பரங்கள் மூலம் மட்டுமே வருடம் 25 கோடி ரூபாவுக்கும் அதிகம் சச்சின் வருமானம் ஈட்டுகிறார். பேங்க் ஆஃப் பரோடாவுக்கு 2026 வரை இவரே முதன்மைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மிகச்சிறந்த முதலீட்டாளராகவும் சச்சின் மாறியிருக்கிறார். 'Azad Engineering' போன்ற நிறுவனங்களில் சச்சின் முதலீடு செய்திருந்தார். இதில் அந்நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்த பிறகு பெரும் லாபத்தைத் தந்தது. இது தவிர EdTech மற்றும் Clean Energy ஆகிய நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். ரியல் எஸ்டேட் முதலீடுகள் வேறு இருக்கிறது. 

மும்பையின் பாந்த்ரா மேற்கில் சச்சின் வசிக்கும் 'பெர்ரி கிராஸ் ரோடு' பங்களாவின் தற்போதைய சந்தை மதிப்பு 100 கோடி ரூபா முதல் 150 கோடி ரூபா வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர லண்டன் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களிலும் அவருக்கு விலையுயர்ந்த சொத்துக்கள் உள்ளன. இதுவே 300 கோடி ரூபாயை தாண்டும் எனச் சொல்லப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் கிரிக்கெட்டில் மட்டுமல்ல வருமானம் ஈட்டுவதில் மற்ற வீரர்களை விட ஜாம்பவானாக இருக்கிறார் என்று மறுக்கமுடியாத உண்மை.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278