Header Logo
SLIC
பல்சுவை
ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

Apr 27, 2026 - 06:08 PM

ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா?
Mobitel Inner 1278
EDEX Inner

வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்ள “காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், இணை நோய் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்பன உள்ளிட்ட பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கட்டிட வேலை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் வெயிலில் பணியாற்ற வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டுமன்றி தொடர்ந்து இரண்டு நாட்கள் அதிக வெப்பத்தில் (வெயிலில்) இருந்தால் Heat stroke ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு உள்ளதாகும். பொதுமக்களும், குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில் வெயில் காலத்தில் Heat Stroke இல் இருந்து உடலை தற்காத்துக் கொள்ள என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம். 

“ஏற்கெனவே இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள் போன்றோருக்கு கோடையில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாவே இருக்கும். எனவே அவர்கள் இந்த காலகட்டத்தில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். 

அதேபோல குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள், கட்டாய தேவைக்கு சென்றால் குடை மற்றும் உடல் முழுவதும் மறைக்கும் அளவிற்கு பருத்தி ஆடைகள் பயன்படுத்த வேண்டும். அதேபோல வெளியில் செல்லும்போது வெண்மை நிற அல்லது வெளிர் நிறப் பருத்தி ஆடைகள் அணிவது நல்லது. 

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடலை இறுக்கும் ஆடைகளையும், கருப்பு நிற ஆடைகளையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டரை முதல் 3 லிட்டர் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகம் வெயிலில் இருப்பவர்கள் 5 லிட்டர் வரைகூட தண்ணீர் குடிக்கலாம். 

வெயில் நேரத்தில் இளநீர், பழச்சாறுகள், தர்பூசணி, நுங்கு மற்றும் சுத்தமான, சுகாதாரமான குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வது நல்லது. நிறைய நீராகார உணவுகள், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அதிகம் உட்கொள்ளவும். 

ஹீட் ஸ்ட்ரோக் என்பது, நம் உடலின் உஷ்ணமானது வெளியே உள்ள வெப்பநிலையைவிட அதிக வெப்பநிலைக்கு செல்லும் நிலை. இந்த நிலை ஏற்பட்டால் மயக்கம், தலைசுற்றல், உடல்வலி, தலைவலி, சரும எச்சரிக்கை போன்ற அறிகுறிகள் தெரியும். இவற்றில் எது தெரிந்தாலும் உடனடியாக நன்கு தண்ணீர் குடித்துவிட்டு வைத்தியரை அணுகவேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278