Header Logo

வடக்கு
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள்

Apr 29, 2026 - 10:40 AM -

0

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. 

நேற்று எலும்புக்கூடுகள் எவையும் அடையாளம் காணப்படவில்லை, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

நேற்றைய அகழ்வு நடவடிக்கை பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. 

கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்கான பாதீடு நீதி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நிதி யாழ். மேல் நீதிமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடைப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை 56 நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு வாரகால அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. 

கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கை முடிவில், மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. 

அவற்றுள் 239 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title