Header Logo
SLIC
கிழக்கு
வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு

Apr 30, 2026 - 11:28 AM

வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு
Mobitel Inner 1278
EDEX Inner

வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு நேற்று (29) முன்வைக்கப்பட்டது. 

இந்த முன்மொழிவு, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உபதவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீர்மானமாக எடுக்கப்பட்டது. 

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்கையில், 

“வாகரைப் பிரதேச சபை வருமானம் குறைவாகக் கிடைக்கும் ஒரு சபையாக இருந்தாலும், பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க மத்திய அரசின் நிதி ஆதரவைப் பெறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். 

ஆனால் தற்போது, வாகரைப் பிரதேசத்தில் வீதிகளைப் புனரமைக்கவும், வீதி விளக்குகள் அமைக்கவும், மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையான நிதி இல்லை. இதேவேளை, நாட்டில் பெருமளவில் நிதி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. டீசல் மற்றும் நிலக்கரி இறக்குமதிகளில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், குறைந்த வருமானம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான அபிவிருத்தி நிதி ஏன் இல்லை என்பது கேள்விக்குறியாகிறது. காணாமல் போனது மக்களின் வரிப்பணமே. அரசாங்கத்தின் அலட்சியமே இந்நிலைக்கு காரணமாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. 

எங்களின் நிலைப்பாடு அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவது அல்ல. ஆனால், இந்த அரசாங்கம் திருந்தி மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு,” என தெரிவித்தார்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278