Header Logo

வடக்கு
விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

May 1, 2026 - 01:18 PM -

0

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வலிகாமம், வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 29 ஆம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், 

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உரித்துடமைக்கு உட்பட்ட தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையிடலை எதிர்வரும் 2026.05.11ஆம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு குறித்த வீதியினை தடுத்து எல்லையிடப்பட்டுள்ள இடப்பரப்புக்குள் வதியும் தங்களிற்கு 1987 ஆம் ஆண்டின 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(1) பிரிவிற்கமைவாக அறிவித்தல் இத்தால் வழங்கப்படுகின்றது. 

மேலும் குறித்த வீதியினை சேர்த்து எல்லையிட்ட இடப்பரப்புக்கான உறுதிகளையும் ஆவணங்களையும் பரிசீலனைக்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிர்வரும் 2026.05.11 ஆம் திகதிக்கு முன்பதாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். 

தவறும் பட்சத்தில், 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச்சட்டத்தின் 59(2) பிரிவிற்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் சட்டத்தின் 59(3)ம் பிரிவின் ஏற்பாடுகளிற்கு அமைவாக அகற்றப்படும் செலவீனங்கள் தங்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சட்டநடவடிக்கைகளுக்கும் தாங்கள் உட்பட நேரிடலாம் என்பதனையும் அறியத்தருகின்றேன் - என்றுள்ளது. 

குறித்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் தையிட்டி காணி அளவீட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பவானி வீதி தவிசாளரால் அடையாளம் காட்டப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title