Header Logo
SLIC
பல்சுவை
பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்?

May 5, 2026 - 08:19 AM

பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்?
Mobitel Inner 1278
EDEX Inner

மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்று தான் பாம்பு. இவை மனிதர்களைக் கடித்தால் உடனே மரணமே ஏற்படுகின்றது. இந்து மதத்தில் பாம்புகளை மக்கள் வழிபடும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக பாம்புகளை வழிபடுவதற்காக சிறப்பு நாளாக நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி ஆகிய தினங்கள் உள்ளன. பொதுவாகவே நாகங்களை வழிபடும் மக்கள் புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். ஆனால் உண்மையில் பாம்புகள் பால் குடிக்குமா? ஏன் இந்த நடை முறை வந்தது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

அறிவியலின் படி, பாலூட்டிகள் மட்டும் பால் குடிக்கும் தன்மை கொண்ட நிலையில், பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த நிலையில், அவை ஒருபோதும் பால் குடிக்காது. 

வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தால், பாம்புகள் இறக்க நேரிடுமாம். ஏனெனில் இதிலுள்ள லாக்டோஸ் பாம்புகளால் ஜீரணிக்கமுடியாமல், ஆபத்தை ஏற்படுத்தும். 

அதுமட்டுமின்றி நுரையீரலுக்கு சென்று நோய் தொற்றுகளை ஏற்படுத்தி, கடைசியில் இறப்பிற்கு வழிவகுக்கின்றது. 

இந்து சமயத்தில் பாம்புகள் சிவனின் ஆபரணமாகவும், விஷ்ணுவின் படுக்கையாகவும் இருக்கின்றது. தெய்வங்களுக்கு படைப்பது போன்று பாம்பிற்கும் நைவேத்தியமாக பாலை படைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். 

பாம்பு புற்றில் மக்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்த பாலை ஊற்றுகின்றனர். மற்றொரு கதை என்னவெனில், அக்காலத்தில் வயல்களுக்கு அருகே மணல் வீட்டில் மக்கள் வசிக்கும் நிலையில், அடிக்கடி வீட்டிற்கு வருவதால், பெண்களின் பயத்தை போக்க இந்த வழிபாட்டை கூறியுள்ளனர். 

பாம்புகள் உண்மையில் புற்றில் இருப்பதாக நினைக்கின்றனர். அந்த புற்று கட்டுவது கரையான்கள் தானாம். பாம்புகள் அந்த புற்றுக்களை தங்களது வசிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278