May 6, 2026 - 10:42 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை, பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில், குறித்த சிறுமியை 29 வயதுடைய நபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி வரவழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்துச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காகவும் வைத்திய பரிசோதனைக்காகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸார் தெரிவித்தனர்.

































