May 7, 2026 - 10:37 AM
By அம்பாறை நிருபர் ஷிஹான்
By அம்பாறை நிருபர் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள வடிகானுக்குள் இன்று (07) காலை முதலை ஒன்று திசைமாறி வந்துள்ளது.
இன்று காலை சுமார் 9 அடி நீளமும், அதிக பருமனையும் கொண்ட முதலை ஒன்று வீதியோர வடிகானுக்குள் சிக்கியிருப்பதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். இது குறித்து உடனடியாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலறிந்த சாய்ந்தமருது பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, முதலையை பாதுகாப்பாக மீட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் முதலை காணப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இம்முதலையைப் பார்ப்பதற்காக பெருமளவிலான பொதுமக்கள் அவ்விடத்தில் திரண்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பொலிஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

































