Header Logo
SLIC
பல்சுவை
அம்மா என்பது வெறும் பெயரல்ல...!

May 10, 2026 - 08:06 AM

 அம்மா என்பது வெறும் பெயரல்ல...!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்றைய 'டிஜிட்டல்' உலகில் எல்லாமே ஒரு 'கிளிக்கில் கிடைத்துவிடுகிறது. ஆனால், நாம் எத்தனை ஸ்டேட்டஸ் போட்டாலும், எத்தனை லைக்ஸ் வாங்கினாலும், நம் மனதின் நிஜமான நிம்மதி வீட்டின் சமையலறையிலிருந்து வரும் அந்த அம்மாவின் குரலில் தான் இருக்கிறது. 

சமூக வலைதளங்களில் நாம் யாரையோ பின் தொடர்கிறோம். ஆனால், நம் வாழ்வின் முதல் 'Inspiration' அம்மாதான். 

விழுந்த போதெல்லாம் எழக் கற்றுக்கொடுத்தது முதல், உலகம் நம்மைத் தள்ளும் போதெல்லாம் பார்த்துக்கலாம் வா எனத் தட்டிக் கொடுத்தது வரை அவள்தான் நம் வாழ்வின் சிறந்த ஆலோசகர். 

நாம் ஒரு புதிய பொருட்களை வாங்குவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைக்கோ செலவு செய்யும் போது, அம்மா நமக்காக எதையாவது விட்டுக்கொடுத்திருப்பாள். 

நமக்குத் தெரியாமலேயே அவள் செய்த சின்னச் சின்னத் தியாகங்கள் தான் இன்று நம்மை இந்த உயரத்தில் உட்கார வைத்திருக்கிறது. 

நாம் 'Offline' இல் இருக்கும் போதும், நம் தேவைகளை 'Online' இல் கவனிக்கும் ஒரே ஜீவன் அவள்தான். 

நண்பர்களே, அன்னையர் தினத்தில் ஒரு 'Story' போட்டுவிட்டு அவளைக் கடந்து போகாதீர்கள். நாம் மொபைல் திரையில் செலவிடும் நேரத்தில் ஒரு பத்து நிமிடம் அவளுடன் செலவிடுங்கள். 

அவளுக்கு உங்கள் 'Tag'களை விட, உங்கள் 'நேரம்' தான் மிகப்பெரிய பரிசு. 

அவள் கேட்கும் சின்னச் சின்ன சந்தேகங்களுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லுங்கள். ஏனென்றால், நாம் பேசக் கூடத் தெரியாத காலத்தில், அவள் நம் மௌனத்தைப் புரிந்து கொண்டு நமக்குப் பேசக் கற்றுக்கொடுத்தவள். 

இந்த அன்னையர் தினத்தில், உங்கள் அம்மாவுக்குப் பிடித்தமான ஒரு விஷயத்தைச் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் அவளை விட்டுத் தள்ளி இருந்தால், அவளுடன் பேச ஏதேனும் வழியில் முயற்சியுங்கள். அதில் கிடைக்கும் 'Vibe' உலகத்தின் எந்த ஒரு இசையிலும் கிடைக்காது. 

அம்மா என்பது வெறும் பெயரல்ல... அது ஒரு உணர்வு!


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278