Header Logo
SLIC
மலையகம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு அபாயம்!

May 11, 2026 - 11:49 AM

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு அபாயம்!
Mobitel Inner 1278
EDEX Inner

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

தித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேட்டினை வெட்டி அகற்றப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் நேற்று (10) மாலை பெய்த கடுமையான மழைக் காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், சம்பவ இடத்திலிருந்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியாளர் தெரிவித்தார். 

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இவ் மண்சரி ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேநேரம், குறித்த வீதியில் பயணிக்கும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278