Header Logo
Mogo Academy

சினிமா
நான் 15 கிலோ குறைச்சது இப்படித்தான்!

May 13, 2026 - 04:09 PM -

0

நான் 15 கிலோ குறைச்சது இப்படித்தான்!
Mobitel inner

மலையாளத்தில் பசில் ஜோசப் நடிப்பில், அதிரடி என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் டோவினோ தாமஸும் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பசில் ஜோசப் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். 

கல்லூரியில் நடக்கும் கதைக்களமான இதில் நடிப்பதற்காக, கிட்டத்தட்ட 15 கிலோ வரை குறைத்திருக்கிறார் பசில். இதற்காக 8 - 10 மாதங்கள் வரை தான் உழைத்திருப்பதாக சமீபத்திய சில பேட்டிகளில் அவரே கூறியிருக்கிறார். 

தன் எடை குறைப்பு பற்றி பேசியுள்ள பசில் ஜோசப், "கடந்த 10 மாதங்களில் டயட் காரணமாக எண்ணற்ற நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். தினந்தோறும் 1 – 2 மணி நேரமென உடற்பயிற்சி செய்தேன். என்னுடைய அதிகபட்ச உழைப்பை இந்தப் படத்திற்காக கொடுத்திருக்கிறேன்” என்றுள்ளார். 

ஏன் இவ்வளவு சிரமப்பட்டு எடை குறைத்தேன் என்பது பற்றி பேசியுள்ள பசில், “ஏனெனில் கல்லூரி மாணவனாக நடிக்க, தாடியை ஷேவ் செய்தால் மட்டும் போதாது. உடலை அதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும். பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம்தான். ஆனால் நம் உடல்நலன்? அதற்கு நாம் உழைக்கத்தான் வேண்டும். அதற்கு நீண்ட காலம் எடுக்கும்தான். எனக்கும் 8 - 10 மாதம் ஆனது. பின்னரே இப்படி ஃபிட் ஆகியிருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், பிற படங்களில் நடிக்க கூட ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை நான்” என்றுள்ளார். 

எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பது பற்றி பேசியுள்ள பசில், “நான் கிட்டத்தட்ட 15 கிலோ குறைத்துள்ளேன். முன்பு என் இடுப்பின் அளவு 34 என்றிருந்தது. இப்போது 28 ஆகியுள்ளது. முன்பு 75 கிலோ இருந்து, இப்போது 60 கிலோ இருக்கிறேன். சொல்லப்போனால் இந்தப் படத்திற்காக 2 வருடங்கள் உழைத்துள்ளேன். அந்தவகையில் ‘அதிரடி’ வெறும் படமல்ல. என் வாழ்வின் ஒரு அங்கம்” என்றுள்ளார். 

தன் உடல் எடை குறைய நிறைய நேரம் எடுத்துக் கொண்டதாக கூறும் பசில், “பெர்சனலாக எனக்கு மரபு காரணங்களால் எளிதில் எடை அதிகரித்துவிடும். மற்றொருபக்கம் நேரம் எடுத்தே குறையும். அதனால்தான் எடை குறைக்க எனக்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. டயட்டை பொறுத்தவரை, 16 மணி நேரம் நான் சாப்பிடாமல் இருந்தேன். மீதமுள்ள 14 மணி நேரத்திலும் டயட்டில் உள்ள உணவுகளையே சாப்பிடுவேன். உதாரணமாக சுகர் கட், குறைவான எண்ணெய் உணவுகள் என்று இருப்பேன்” என்றுள்ளார். 

உடற்பயிற்சியை பொறுத்தவரை, “சாப்பிடாமல் இருக்கும் கடைசி 2 மணி நேரத்தில் உடற்பயிற்சி செய்வேன். அன்றாடம் 700 – 1,000 கலோரிவரை வலிமைக்கான பயிற்சிகள், ரன்னிங், 8 – 10 கி.மீ. வரையிலான நடைப்பயிற்சி, இவற்றுடன் கார்டியோ பயிற்சிகள் செய்வேன்” என்றுள்ளார் பசில். 

டயட்டை சரியாக பின்பற்ற வேண்டுமென தனியே செஃப் நியமித்திருந்தார் பசில் என்றொரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார் நடிகர் டோவினோ தாமஸ். அதேநேரம், “என்னதான் செஃப் வைத்து உணவில் கவனமாக இருந்தாலும், உடல் எடை குறைய வேண்டும் என்றால் சுய ஒழுக்கம் இருக்க வேண்டும். பசிலிடம் அது இருந்தது” என்றுள்ளார் டோவினோ.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara