Header Logo
Mogo Academy

செய்திகள்
108 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் புவியியலாளர் கைது

May 15, 2026 - 02:13 PM -

0

 108 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் புவியியலாளர் கைது
Mobitel inner

108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் இந்த போதைப்பொருளை 'பசுமை வழி' ஊடாக வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போது போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைதாகியுள்ளார். 

சந்தேகநபர் 60 வயதுடைய இந்திய பிரஜை என்பதுடன் அவர் ஒரு புவியியலாளர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவர் இந்த போதைப்பொருளுடன் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து, கட்டாரின் தோஹாவை அடைந்துள்ளார். 

அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 664 என்ற விமானம் மூலம் இன்று (15) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்த இரண்டு சான்றிதழ் ஆவணங்களும், மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த விமானப் பயணியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara