Header Logo
Mogo Academy

சினிமா
ரவி மோகன் எனக்கு மாப்பிள்ளை இல்ல மகன்!

May 16, 2026 - 05:30 PM -

0

ரவி மோகன் எனக்கு மாப்பிள்ளை இல்ல மகன்!
Mobitel inner

ஆர்த்தியுடன் விவாகரத்து கோரி ரவி மோகன் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே ‘இனி ரவி உங்களுடையவர்’ என்று கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர்களின் ரவி - கெனிஷா தொடர்பு முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த சூழலில் தான் நடிகர் ரவி மோகன் கண்ணீருடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். 

அவர் கூறுகையில், “இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் அப்பாவும் என் அண்ணனும் 4 வருடங்கள் வேலை செய்யவில்லை. இளம் வயதில் என் குடும்பத்திற்காக உழைத்தேன். என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை. 

என்னுடைய கடந்த வாழ்க்கையில் 14 வருடம் வாழ்ந்துள்ளேன். ஃபெமினிசம் என்றால் என்ன தெரியாதா? என் படங்களில் பெண்ணின் உரிமையைப் பற்றி பேசுகிறேன். நான் தப்பாக பெண்களை பேசுவேனா? என் தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. 

என்னுடைய பிள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன்? அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால் இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. சம்பாதித்த பணத்தை கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார்” என்று எமோஷனலாக பேசியிருந்தார். 

இந்நிலையில் ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், “ரவி குறித்து என் மகள் என்னிடம் வந்து சொல்லும்போது உண்மையாகவே சந்தோஷப்பட்டோம். காரணம், ‘நோ’ என்று சொல்ல எந்த காரணமும் இல்லை. ரவியின் குடும்பம் குறித்து எங்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் எப்படி வளர்த்தார்கள் என்பதெல்லாம் திரைத்துறையில் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

அப்படியான வீட்டிலிருந்து ரவி வந்தார் என்பதால் அவர் எந்த தவறும் செய்யமாட்டார் என்பது எங்களுக்கு தெரியும். ரவி மோகனை முதலில் நான் படத்தில் தான் பார்த்தேன். இப்படி ஒருவர் நமக்கு மருமகனாக வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். இறுதியில் அது நனவாகிவிட்டது. எனக்கு தங்க வளையல் தேவையில்லை. தங்கமான மகன் கிடைத்துள்ளார். அவர் எனக்கு மருமகன் அல்ல மகன்” என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara