Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
பெண்களுடன் உல்லாசம் வேண்டுமா? குறுஞ்செய்தியால் பரபரப்பு

May 18, 2026 - 10:13 AM

பெண்களுடன் உல்லாசம் வேண்டுமா? குறுஞ்செய்தியால் பரபரப்பு
Mobitel Inner 1278

திருப்பூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (28). 

பனியன் நிறுவன தொழிலாளியான இவரது செல்போன் எண்ணுக்கு சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், திருப்பூரில் குறிப்பிட்ட விடுதி ஒன்றில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் ஆசைப்பட்ட சந்தோஷ்குமார், சம்பந்தப்பட்ட செயலி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டுள்ளனர். 

பின்னர் விடுதி விவரங்களையும் அனுப்பி வைத்து தொடர்ந்து பணம் பறித்துள்ளனர். 

இதற்காக கிவ்ஆர் குறியீடு அனுப்பி வைத்து சந்தோஷ்குமாரிடம் இருந்து முதலில் ரூ.4 ஆயிரம் பெற்றுள்ளனர். 

தொடர்ந்து மேலும் ரூ.2 ஆயிரம் அனுப்புமாறு கேட்டுள்ளனர். அப்போது தான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தோஷ்குமார், திருப்பூர் வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். 

அதன்பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர். இந்த மோசடி சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த வெற்றிவேல் (41), சக்திவிக்னேஷ் (24), கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த கோகுல்குமார் (35), அருண்பிரசாத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 

விசாரணையில் வெற்றிவேல் உணவக தொழிலாளி என்றும், கோகுல்குமார் பொறியியல் பட்டதாரி என்றும், அருண்பிரசாத் பெயிண்டர் என்றும் தெரியவந்தது. 

மேலும், இவர்கள் இணைந்து ஒன்லைன் மூலம் பலரிடம் இதுபோல் பண மோசடியில் ஈடுபட்டதும் பொலிஸாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278