Header Logo
Mogo Academy

சினிமா
கிரிக்கெட் வீரருடன் ஸ்ரீலீலா காதல்?

May 18, 2026 - 03:31 PM -

0

கிரிக்கெட் வீரருடன் ஸ்ரீலீலா காதல்?
Mobitel inner

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஐதராபாத்தை சேர்ந்த துடுப்பாட்ட வீரர் திலக் வர்மா 2022 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி புகழ் பெற்றார். 

இந்நிலையில் ஸ்ரீலீலா- திலக் வர்மா காதல் விவகாரம் பேசும்பொருளாகி உள்ளது. இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகையில், ‘ஸ்ரீலீலா, திலக் வர்மாவை சுற்றியுள்ள தகவல்கள் ஆதாரமற்றவை. இருவரும் சந்தித்ததோ, பேசிக் கொண்டதோ இல்லை. இந்த யூகங்களில் துளியும் உண்மை இல்லை’ என கூறினார். 

சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இடம் பெற்ற ஒரு வைரல் வீடியோ ஆன்லைனில் வெளியான பிறகு ஸ்ரீலீலா காதல் கிசுகிசுக்கள் அதிகரித்தன. வீடியோவில் மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்ட வீரரான திலக் வர்மா ஹெட்போனை அணிந்து கொண்டு ஓட்டல் லாபி வழியாக நடந்து செல்லும் போது சூர்யகுமார் அவரிடம் காதலில் விழுந்து விட்டாய் என கிண்டல் செய்தார். 

சூர்யகுமார் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் ரசிகர்கள் ஸ்ரீலீலாவுடன் தொடர்புபடுத்தி கருத்துக்களை வெளியிட்டனர். 

ஸ்ரீலீலா, தனது தாயார் வைத்தியர் சொர்ணலதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அதே சமயம் திலக் வர்மாவும் கோவிலுக்கு வந்திருந்தார். அதுபோன்று தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் மும்பையில் நடந்த போட்டியில் ஸ்ரீலீலா, அவரது தாயார் கலந்து கொண்டதும் காதல் யூகங்களுக்கு வழிவகுத்தது.


MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara