Header Logo

வடக்கு
சங்கிலி பறித்து தப்பிய கொள்ளையர்கள் நெல்லியடியில் கைது!

May 19, 2026 - 11:10 AM -

0

சங்கிலி பறித்து தப்பிய கொள்ளையர்கள் நெல்லியடியில் கைது!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். 

வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும் அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர். 

இருந்த போதிலும், மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்டவார்கள், அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

விரைந்து செயற்பட்ட பொலிஸார் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததை அடுத்து, நெல்லியடி பகுதி ஊடாக குறித்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பி செல்வதை கண்ணுற்று, நெல்லியடி பொலிஸார் இருவரையும் மடக்கி பிடித்தனர். 

விசாரணைகளின் போது, அறுக்கப்பட்ட தங்க சங்கிலியையும் அவர்களின் உடைமையில் இருந்து மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் மீட்கப்பட்ட தங்க சங்கிலியையும், வழிபறிக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

title