Header Logo
Mogo Academy

சினிமா
கருப்பசாமி பார்த்து பரவசமடைபவர்களுக்கு முதலுதவி கொடுங்கள்!

May 19, 2026 - 11:33 AM -

0

கருப்பசாமி பார்த்து பரவசமடைபவர்களுக்கு முதலுதவி கொடுங்கள்!
Mobitel inner

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15 ஆம் திகதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவின் திரைப் பயணத்தில் மிகச்சிறந்த கமர்ஷியல் கம்பேக் படமாக அமைந்துள்ளது. 

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கருப்பு படம் வெளியாக இருந்த நிலையில், சில நிதி சிக்கல்கள் காரணமாக ஒத்திப்போனது. 

பின்னர் படம் ரிலீஸ் ஆகி மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. 

கருப்பு படத்தை காண வரும் பலருக்கு திரையரங்குகளிலேயே சாமி வந்து பரவசமடைகின்றனர். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக காண முடிகிறது. 

இந்நிலையில், “கருப்பசாமியைக் கண்டு பரசவசம் அடைபவர்களுக்கு உரிய முதலுதவி வழங்கி உதவுங்கள்” - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். 

கருப்பு திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! 

மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara