Header Logo
Mogo Academy

சினிமா
Delete சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு?

May 19, 2026 - 12:00 PM -

0

Delete சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு?
Mobitel inner

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் ஓடிடி வெளியீட்டை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சில தொழில்நுட்ப மற்றும் நிதி சிக்கல்களால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டாலும், தற்போது படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய இந்த ஃபாண்டஸி ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.​ 

சமூக நீதி, சட்ட அமைப்பின் குறைகள் மற்றும் கருப்பசாமி வழிபாட்டை மையமாகக் கொண்ட கருப்பு படத்தின் கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான அமேசான் பிரைம் கைப்பற்றி உள்ளது. பொதுவாக தமிழ் திரைப்படங்களுக்கு பின்பற்றப்படும் இடைவெளி நடைமுறையின் அடிப்படையில், ‘கருப்பு’ படம் ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அல்லது அமேசான் பிரைம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

மே 14 ஆம் திகதி அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தயாரிப்பு நிலுவைத் தொகைகள் காரணமாக காட்சிகள் இரத்து செய்யப்பட்டன. பின்னர் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளை சரிசெய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மே 15 ஆம் திகதி உலகம் முழுவதும் படம் வெளியிடப்பட்டு, முதல் வார இறுதிக்குள் சுமார் 147 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

‘கருப்பு’ திரைப்படத்தில் நட்டி நடராஜ், ஸ்வாசிகா, சிவதா மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்க்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு, இன்ஸ்டா பிரபலங்களான சதீஷ், தீபா, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்பட பலர் நடித்திருந்தாலும், அவர்களின் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அதனால் அவர்கள் நடித்த காட்சிகளை ஓடிடியில் சேர்த்து வெளியிடுமாறு ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


MOST READ

காணொளி
பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara