Header Logo
Mogo Academy

செய்திகள்
பால்மா விலை அதிகரிப்பு

May 20, 2026 - 11:41 AM -

0

பால்மா விலை அதிகரிப்பு
Mobitel inner

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

 

இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

சந்தை  நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால்மா பெக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

 

எவ்வாறாயினும், அடுத்த வாரத்திற்குள் குறித்த புதிய விலைகளின் கீழ் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்கள் விநியோகிக்கப்படும் என்றும், தற்போது சந்தையிலுள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

 

இதற்கிடையில், ரூபாய் மதிப்பிழப்புடன் டொலரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 

அச்சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதன்படி வரும் நாட்களில் சீனி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 


MOST READ

காணொளி
கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

Mobitel Upahara