Header Logo

செய்திகள்
இலங்கை ரூபாய்! 'புளூம்பெர்க்' வெளியிட்ட அதிரடி அறிக்கை!

May 21, 2026 - 07:43 AM -

0

இலங்கை ரூபாய்! 'புளூம்பெர்க்' வெளியிட்ட அதிரடி அறிக்கை!

இந்த மாதத்திற்குள் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியுள்ளதாக 'புளூம்பெர்க்' இணையதளம் தெரிவித்துள்ளது. 

 

உலக அளவில் முன்னணி வணிக இணையதளமான புளூம்பெர்க், இலங்கை ரூபாய் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, அது மேலும் குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இதேவேளை, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தளவுக்கு பெருமளவில் வீழ்ச்சியடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான ஆபத்தாக முடியும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பணவீக்கம் பெருமளவில் உயரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்சினைக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

 

இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ரூபாயின் இந்த வீழ்ச்சி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்றும், இதற்கு அனைவரும் வலுவாக முகம்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title