Header Logo
Mogo Academy

செய்திகள்
கிழக்கில் பல இளைஞர்களை ஏமாற்றிய நபர் சிக்கினார்

May 22, 2026 - 06:14 PM -

0

கிழக்கில் பல இளைஞர்களை ஏமாற்றிய நபர் சிக்கினார்
Mobitel inner

அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் சூப்பர் மார்க்கெட்களில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இந்தச் சந்தேகநபர் பண மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. 

இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்ய பலமுறை முயற்சித்த போதிலும், அவர் அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவாகியிருந்தார். 

பின்னர், பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய சோதனையின் போது, குச்சவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இந்தச் சந்தேகநபருக்கு எதிராக நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, அவருக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விசாரணைகளின் படி, சந்தேகநபர் மோசடி செய்துள்ள ஒட்டுமொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara