Header Logo
Mogo Academy

செய்திகள்
வாகன விபத்து போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை

May 23, 2026 - 07:19 AM -

0

வாகன விபத்து போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை
Mobitel inner

துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. 

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை - களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் மீது கெப் ரக வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்திருந்ததுடன், விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். 

உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் வாக்குமூலம் அளித்துள்ளதுடன், விபத்து குறித்த விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு விபத்து என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோடியிருந்த 24 வயதுடைய கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே நிலவிய பழைய முரண்பாடு காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara