Header Logo
Mogo Academy

செய்திகள்
வாகன, தங்கக் கடன்களுக்கான வரம்புகளை இறுக்கிய இலங்கை மத்திய வங்கி

May 24, 2026 - 09:42 PM -

0

வாகன, தங்கக் கடன்களுக்கான வரம்புகளை இறுக்கிய இலங்கை மத்திய வங்கி
Mobitel inner

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. 

பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை, அண்மைக்கால நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்கள் மற்றும் வாகன இறக்குமதி மீதான கூடுதல் கட்டணம் காரணமாக வாகன விலைகள் தற்காலிகமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி புதிய நிதியியல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, நாளை 25 முதல் அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, 

உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (LTV) 70 வீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

நாளை முதல் புதுப்பிக்கப்படும் பழைய கடன்களுக்கும் இதுவே பொருந்தும். 

அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் (LTV limits) மேலும் 10 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன. 

தங்கம் மற்றும் வாகனக் கடன்கள் அண்மைக்காலமாக மிக வேகமாக அதிகரித்து வருவதால், அது நிதி அமைப்பில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த மெக்ரோபிரூடென்ஷியல் கொள்கை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara