Header Logo

செய்திகள்
மூளைக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான விசேட வழிகாட்டுதல்கள்

May 25, 2026 - 06:11 PM -

0

மூளைக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான விசேட வழிகாட்டுதல்கள்

மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) பாடசாலைகள் மற்றும் சமுக அடிப்படையிலான பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருவதாகத் தென்படுவதால் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அனைத்து சுகாதாரத் துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடந்த வார இறுதியில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

விசேட வழிகாட்டுதல்களின் படி நோயினை கண்டறிதல், வகைப்படுத்தல், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பொது சுகாதார நடைமுறைகள், பாடசாலைக்கான நடைமுறைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் ஆய்வக சோதனைகள், மருத்துவ நடைமுறைகள், சமூக அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், திருவிழா மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் போன்றவை அடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவுதல் , இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை முழங்கையால் அல்லது கைக்குட்டை/திசுவால் மூடுவது, அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது, வீடுகளில் சரியான காற்றோட்டத்தை உறுதி செய்வது போன்ற விடயங்களை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்நோய் பரவுவதை அவதானித்துள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும், மேலும் மூளைக்காய்ச்சல் 7 நாட்களுக்குள் சரியாகிவிடும் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்து உள்ளது. 

நீர், உணவு மற்றும் நோயாளியின் இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலமாகவும், நெருங்கிய தொடர்பு மூலமாகவும், வைரஸ் பரவுவதாகவும் அத்துடன் 3 முதல் 7 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படுவதாகவும் சுவாச மண்டலம் வழியாக நோய் பரவுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம தலைமையிலான தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு இந்த அறிவுறுத்தல்களை தயாரித்துள்ளது. 

அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள், அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் வைத்திய அத்தியட்சகர்கள், மாகாண மற்றும் மாவட்ட சமூக வைத்தியர்கள், தொற்றாநோய் வைத்திய அதிகாரிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கும் தொற்றுநோயியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் கருணாபேம தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title