Header Logo
Mogo Academy

சினிமா
கணவர் பற்றி முதல்முறையாக பேசிய சமந்தா!

May 26, 2026 - 11:01 AM -

0

கணவர் பற்றி முதல்முறையாக பேசிய சமந்தா!
Mobitel inner

சமந்தா ஹீரோயினாக நடித்த 'மா இன்டி பங்காரம்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தன் கணவர் ராஜ் நிடிமோரு பற்றி முதல்முறையாக சமந்தா பேசியுள்ளார். 

சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமோருவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரியும். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா ராஜ் நிடிமோருவைக் காதலித்தார். சிறிது காலம் காதலித்த இவர்கள், சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 'மா இன்டி பங்காரம்' படத்தைத் தயாரித்துள்ளனர். சமந்தா நாயகியாக நடிக்க, ராஜ் நிடிமோரு கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 19 ஆம் திகதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் திங்கள்கிழமை ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது. 

விழாவில், தன் கணவர் ராஜ் நிடிமோரு பற்றி சமந்தா மனம் திறந்து பேசினார். 'ராஜ் நிடிமோரு உங்களை எப்போதாவது சங்கடப்படுத்தி இருக்கிறாரா?' என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு, 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அவர் என்னை ஒருபோதும் இரிடேட் செய்தது இல்லை' என சமந்தா பதில் சொன்னார். 'நந்தினி ரெட்டி, ராஜ் நிடிமோரு இருவருமே பெர்ஃபெக்ட். ஆனால் நந்தினி ரெட்டி இரிடேட் செய்வது எனக்குப் புதிதல்ல, 15 வருடங்களாகச் சகித்து வருகிறேன், அது பழகிவிட்டது' என சமந்தா ஜாலியாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் பூ கொடுத்து சமந்தாவுக்கு ப்ரபோஸ் செய்தது ஸ்பெஷல் அட்ராக்‌ஷனாக இருந்தது. 

சமந்தா தொடர்ந்து பேசுகையில், "'மா இன்டி பங்காரம்' டிரெய்லர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். எங்களுக்காக இங்கு வந்த ஒவ்வொரு ரசிகருக்கும் நன்றி. நந்தினியும் ராஜும் எல்லா விஷயத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருப்பார்கள். 'மா இன்டி பங்காரம்' படத்தில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கும். இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெயினர். ஆக்‌ஷன், டிராமா, காமெடி என அனைத்து அம்சங்களும் உள்ளன. ஜூன் 19 ஆம் திகதி படம் வருகிறது. அனைவரும் பார்த்து என்ஜாய் செய்யுங்கள். ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் இந்தப் படம் இருக்கும்" என்று கூறினார். 

'மா இன்டி பங்காரம்' டிரெய்லர் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், சமந்தாவிடம் இருந்து ஒரு நெக்ஸ்ட் லெவல் படம் வரப்போகிறது என்று சொல்லலாம். ஒரு கூட்டுக் குடும்பத்துக்கு மருமகளாக வரும் சமந்தா, அங்குள்ள பழக்கவழக்கங்கள் தெரியாமல் கஷ்டப்படுகிறார். வீட்டுக்குள் இருக்கும் சமந்தா வேறு, வெளியில் அவரது நிஜ முகம் வேறு. தன் குடும்பத்தைக் காப்பாற்ற, ஒரு ஹீரோவைப் போல சண்டை போடுகிறார். டிரெய்லரின் தொடக்கத்தில், 'உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே' எனப் பெண் பார்க்க வந்தவர் கேட்க, அதற்கு சமந்தா காட்டும் ஆக்‌ஷன்தான் டிரெய்லரின் ஆரம்பமே. 

'நான் யாருன்னு உனக்குத் தெரியுமா?' என்று சமந்தா கவுன்ட்டர் கொடுப்பது மாஸாக இருக்கிறது. புகுந்த வீட்டில் கேட்கும் கேள்விகளால் திணறும் சமந்தா, 'திருடனைப் பிடித்து விசாரிப்பது போலக் கேட்டார்கள்' என்று கணவரிடம் புலம்புகிறார். 'என் உயிரைக் கொடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்' என்று அவர் பேசும் வசனம் பட்டையைக் கிளப்புகிறது. அதன்பின் சமந்தாவின் ஆக்‌ஷன் தொடங்குகிறது. அப்போது, அவர் பேசும் வசனம் ரசிகர்களுக்கு செம ட்ரீட். டிரெய்லர் மொத்தத்தில் அதிரடியாக உள்ளது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara