Header Logo
Mogo Academy

செய்திகள்
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் டுபாயில் கைது

May 26, 2026 - 04:10 PM -

0

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் டுபாயில் கைது
Mobitel inner

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இவர் அமெரிக்காவிற்கும் தேடப்படும் ஒரு நபராக விளங்குகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவர் டுபாயில் ஒரு பெரும் கோடீஸ்வரரைப் போல மறைந்து வாழ்ந்து வந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கைக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் 5 முக்கிய பெரும் கடத்தல்காரர்களில் ஷிரான் பாசிக் என்பவரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இவரது கைது குறித்து இலங்கைக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara